வர்த்தக பயன்பாட்டு சிலிண்டரின் விலை குறைந்தது... எவ்வளவு தெரியுமா?
வீட்டு உபயோக சிலிண்டரின் விலையை, சில நாட்களுக்கு முன்பு 100 ரூபாய் குறைப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது .
19 கிலோ சிலிண்டர் விலை சென்னையில் கடந்த மாதம் 1960 ரூபாய் 50 காசுகளாக இருந்தது. இந்த விலை தற்போது 30 ரூபாய் 50 காசுகள் குறைந்து 1930 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
அதன்படி எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது சிலிண்டர் விலையை உயர்த்தியும், குறைத்தும் அறிவிக்கின்றன. இந்த அறிவிப்புகள் மாதத்தின் முதல் நாளில் வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி இன்று(ஏப்ரல் 1) வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்திருக்கிறது. அதன்படி, சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.30.50 குறைந்து, ரூ.1,930-க்கு விற்பனையாகிறது.
வீட்டு உபயோக சிலிண்டரின் விலையை, சில நாட்களுக்கு முன்பு 100 ரூபாய் குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. மகளிர் தின பரிசாகவும் இது இருக்கும் என்று பிரதமர் மோடி தனது பதிவில் குறிப்பிட்டிருந்த நிலையில், விலை குறைப்பு உடனே அமலுக்கு வந்தது. அதன்படி வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.818.50-ஆக இருந்தது.
தற்போது இந்த மாதமும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதனால் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.818.50 என்ற அளவிலேயே தொடர்கிறது.
What's Your Reaction?