தமிழகத்தில் ஏப்.19ல் கோர்ட் லீவு.. தேர்தலுக்குப் பின் வழக்குகள் விசாரணை

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளான 19 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Apr 13, 2024 - 11:23
தமிழகத்தில் ஏப்.19ல் கோர்ட் லீவு.. தேர்தலுக்குப் பின் வழக்குகள் விசாரணை

நாடு முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது. 

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலில் 100 சதவீதம் வாக்குகள் பதிவாக வேண்டி தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னெடுப்புகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

தேர்தல் நாளில் அனைத்து தொழிற்சாலைகள், நிறுவனங்கள், அலுவலகங்கள் உள்ளிட்டவைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

இதனால் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நீதிமன்றங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 19 ல் சென்னை உயர்நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் கீழமை நீதிமன்றங்கள் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், அன்று விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகள் தேர்தலுக்குப் பிறகு பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow