தீபாவளிக்காக அடுத்தடுத்த ஸ்பெஷல் அறிவிப்புகளை வெளியிடும் அரசு.. தற்போது வந்துள்ள இனிப்பு செய்தி என்ன தெரியுமா?
தீபாவளி நெருங்கிக்கொண்டிருப்பதால் ஜவுளி கடைகளிலும், பட்டாசுக் கடைகளிலும் பொதுமக்களின் சிரமமின்றி செல்ல, முக்கிய கடைவீதிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது

தீபாவளி நெருங்கிக்கொண்டிருப்பதால் ஜவுளி கடைகளிலும், பட்டாசுக் கடைகளிலும் பொதுமக்களின் சிரமமின்றி செல்ல, முக்கிய கடைவீதிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று. கிருஷ்ண பெருமான் நரகாசுரனை வதம் செய்யும் நாளே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. தீபாவளி திருநாளன்று அதிகாலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடைகள் அணிந்து கடவுளை வழிபடுவது வழக்கம். இதனையடுத்து குழந்தைகள் முதல் பெரியோர் வரை பட்டாசுகள் வெடித்தும், விதவிதமான பலகாரங்கள் சாப்பிட்டும் அந்நாளை சிறப்பாகக் கொண்டாடுவர்.
அதன்படி இந்த ஆண்டு வருகிற 31ம் தேதி இப்பண்டிகை மிகக் கோலாலகமாகக் கொண்டாடப்படுகிறது. வியாழக்கிழமை அன்று தீபாவளி வருவதால் அன்று அரசு விடுமுறை ஆகும். இதையடுத்து வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஏற்கனவே விடுமுறை நாட்கள்தான். இதற்கு இடையில் இருக்கும் வெள்ளிக்கிழமையையும் விடுமுறை நாளாக அறிவிக்க கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
இந்த கோரிக்கையை கருத்தில் எடுத்துக்கொண்ட தமிழ்நாடு அரசு தீபாவளிக்கு மறுநாளான (நவ. 1) வெள்ளிக்கிழமையையும் அரசு விடுமுறையாக அறிவித்தது. இந்த அறிவிப்பினால் பொதுமக்கள் மிகவும் குஷியில் இருக்கின்றனர். தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை இருப்பதால் சென்னையில் தங்கி வேலை பார்க்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இதனால் மக்கள் சிரமமின்றி தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழ்நாடு அரசு கூடுதல் பேருந்துகளை இயக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமில்லாமல், தீபாவளி நெருங்கிக்கொண்டிருப்பதால் ஜவுளி கடைகளிலும், பட்டாசுக் கடைகளிலும் பொதுமக்களின் சிரமமின்றி செல்ல, முக்கிய கடைவீதிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
அதாவது, வார இறுதி நாட்களான 20.10.2024 (இன்று), 26.10.2024 மற்றும் 27.10.2024 ஆகிய மூன்று நாட்களுக்கு பயணிகள் வசதிக்காக தியாகராய நகர், புரசைவாக்கம், வள்ளலார் நகர் மற்றும் வண்ணாரப்பேட்டை (எம்.சி. ரோடு) ஆகிய இடங்களுக்கு காலை 06:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
What's Your Reaction?






