தேர்தல் விதிகளை மீறினாரா முதலமைச்சர்..? தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் !

மாநில முதலமைச்சரே இதுபோல் தேர்தல் விதிகளை மீறி ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருப்பது, எதற்காக தேர்தல் விதிகள் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது- அதிமுக வழக்கறிஞர்

Apr 9, 2024 - 21:59
தேர்தல் விதிகளை மீறினாரா முதலமைச்சர்..? தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் !

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது. 

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில்  2 நாட்களுக்கு முன் பிரசாரத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோயம்புத்தூரில் கிரிக்கெட் விளையாட்டு மைதானம் கட்டித் தருவோம் என அறிவித்திருப்பது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயலாகும் என தமிழக தலைமை தேர்தல் ஆணையத்திடம் அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் இன்பதுரை புகார் அளித்துள்ளார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வேளையில் விளையாட்டு மைதானம் கட்டித் தருவோம் என கூறியிருப்பது தவறான ஒன்று எனக் குறிப்பிட்டார். மாநில முதலமைச்சரே இதுபோல் தேர்தல் விதிகளை மீறி ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருப்பது, எதற்காக தேர்தல் விதிகள் என்ற கேள்வியை எழுப்பியுள்ளதாக இன்பதுரை கூறினார். 

டாஸ்மாக் மூலம் தினமும் வசூல் ஆகும் தொகையை திமுகவினர், கருவூலத்தில் கொண்டு சேர்க்கிறார்களா? என்பதையும்,  தமிழக தலைமை தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருப்பதாக தெரிவித்தார். முன்னதாக, மதுபானம் விற்பனையை கருவூலத்தில் செலுத்தாமல் தேர்தல் செலவுக்காக தமிழக அரசு பயன்படுத்தி வருவதாக கிடைத்த தகவலை அடுத்து இந்த புகாரை தமிழக தலைமை தேர்தல் ஆணையத்தில் அளித்திருப்பதாக இன்பதுரை தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow