நாடு சுத்தமாக நல்லவர்களை தேர்ந்தெடுங்கள்.. சொல்கிறார் பெரம்பலூர் ஐ.ஜே.கே. வேட்பாளர்
தேர்தலில் நல்லவர்களைத் தேர்ந்தெடுத்தால் அனைத்தும் நல்லதாகவே நடக்கும் என பெரம்பலூர் ஐ.ஜே.கே. வேட்பாளர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பாரிவேந்தர், தொகுதிக்கு உட்பட்ட கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், "பெரம்பலூர் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் 1,200 ஏழை, எளிய மாணவர்களை தனது சொந்த செலவில் உயர்கல்வி படிக்க வைத்துள்ளேன். கடந்த 5 ஆண்டுகளில் நான் தனிப்பட்ட முறையிலும், எம்.பி.யாகவும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன்.
தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்காமல் ஒரு சான்றிதழ் கூட வாங்க முடியாது. லஞ்சம் கொடுத்தே அனைத்து வேலைகளும் நடக்கும் நிலை உள்ளது. தமிழ்நாடு என்றாலே லஞ்சம், ஊழல் என பேசிக்கொள்ளும் அளவுக்கு கெட்டுபோயுள்ளது. நாடு சுத்தமாகி வந்துகொண்டிருக்கும் நிலையில்,
தேர்தலில் ஊழல்வாதிகளை தேர்ந்தெடுத்துவிடாதீர்கள்.
தேர்தலில் மக்கள் நல்லவர்களைத் தேர்ந்தெடுத்தால் நல்லதே நடக்கும். மீண்டும் நான் எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டால் மக்கள் தேவைகளை அனைத்தையும் பூர்த்தி செய்வேன். மக்களின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் எடுத்துக் கூறி நிறைவேற்றித் தருவேன். எனவே தேர்தலில் நல்லவர்களை தேர்ந்தெடுத்து நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுங்கள்" என கூறினார்.
What's Your Reaction?