கனமழையை தமிழகஅரசு முறையாக கையாண்டது - கே.எஸ்.அழகிரி தகவல்

மத்திய அரசு உடனடியாக  தமிழக அரசு வெள்ள நிவாரணமாக கோரியுள்ள 5000 கோடி ரூபாயை வழங்க வேண்டும்

கனமழையை தமிழகஅரசு முறையாக கையாண்டது - கே.எஸ்.அழகிரி தகவல்

சமீபத்திய கன மழையை தமிழக அரசு முறையாக, சரியாக, திறமையாக கையாண்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்து கொள்வதற்காக அரியலூர் செல்லும் வழியில்பழைய சதுரகிரி இன்று காலை கும்பகோணம் வந்தார்.அப்போது கும்பகோணத்தில் செய்தியாளர்களை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்தார்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்காக அனைத்து பகுதிகளிலும் பாசறை கமிட்டிகள் அமைக்கப்பட்டு வருவதாகவும், நேற்று தர்மபுரியில் காங்கிரஸ் கட்சியின் பாசறை கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்டு தற்போது கும்பகோணம் வருகிறேன்.

தமிழகத்தில் சமீபத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில்  பெய்தது கனமழை என்று கூற முடியாது. அது மேகப்பிளவு, இயற்கை பேரிடர், இந்த இக்கட்டான சூழ்நிலையை தமிழக அரசு திறமையாக, சரியாக, முறையாக கையாண்டு இருக்கிறது. 

மத்திய அரசு உடனடியாக  தமிழக அரசு வெள்ள நிவாரணமாக கோரியுள்ள 5000 கோடி ரூபாயை வழங்க வேண்டும்.இந்திய கூட்டணி பளிச்சென்று இருக்கிறது.முன்னதாக கும்பகோணம் ரயில் நிலையத்தில் வந்து இறங்கிய கே.எஸ்.அழகிரிக்கு காங்கிரஸ் கட்சியினர் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பளித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow