அரசு பள்ளி மாணவர்களுக்கு விருந்தளித்து பிறந்தநாள் கொண்டாடிய விசிக எம்எல்ஏ

அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் குழந்தைகள் உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது.

Dec 12, 2023 - 17:06
Dec 12, 2023 - 17:49
அரசு பள்ளி மாணவர்களுக்கு விருந்தளித்து  பிறந்தநாள் கொண்டாடிய விசிக எம்எல்ஏ

பிறந்தநாளை முன்னிட்டு அரசு பள்ளியில் சக மாணவர்களுடன் உணவு அருந்திய விசிக எம்எல்ஏ சிந்தனைச் செல்வன் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அருகே உள்ளது பருவதராஜ குருகுல அரசு உதவி பெறும் பள்ளி.இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுடன் இணைந்து கேக்கு வெட்டிய பின் மாணவர்களுக்கு சைவ உணவு வழங்கப்பட்டது.

அப்போது எம்எல்ஏ சிந்தனைச்செல்வன் சக மாணவர்களுடன் இணைந்து தரையில் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.பின்னர் விசிக நகர செயலாளர் நாகராஜன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் மரக்கன்றுகளை எம்எல்ஏ சிந்தனைச் செல்வன் பொதுமக்களுக்கு வழங்கினார்.மேலும் காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் குழந்தைகள் உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில்  மாவட்ட செயலாளர் மணவாளன், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் செல்லப்பன், நகர செயலாளர் நாகராஜன், மாநில நிர்வாகி அந்தோணி சிங்,
தொகுதி துணை செயலாளர் வெற்றி வேந்தன், இளந்தமிழன் வானமாதேவி ராஜா உள்ளிட்ட விசிக நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சி கலந்துகொண்டு எம்எல்ஏ சிந்தனைச் செல்வனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow