மகளிர் தினத்தில் தாய்க்கு கோயில்... ஏழைகளுக்கு மருத்துவ உதவி... நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மருத்துவர்

Mar 8, 2024 - 21:26
மகளிர் தினத்தில் தாய்க்கு கோயில்... ஏழைகளுக்கு மருத்துவ உதவி... நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மருத்துவர்

மகளிர் தினத்தையொட்டி, மறைந்த தனது தாயாருக்காக கோவில் கட்டிய மகன், ஏழை மக்களுக்கு மருத்துவ உதவிகளை செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மருத்துவர் ஜெகந்த். இவரது தாயார் ஜெய மீனா கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால்  உயிரிழந்தார். மரணத்திற்கு முன் ஜெய மீனா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உன்னால் முடிந்தவரை மருத்துவ உதவிகளை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

தாயின் சொல்லை மறுக்காத மகனான ஜெகந்த், அவருக்காக  சுருளி அருவியில் மகளிர் தினமான இன்று (மார்ச் 8) ஸ்ரீ ஜெயமீனா என்ற பெயரில் கோயில் ஒன்றை கட்டி அதற்கான திறப்பு விழாவினை நடத்தியுள்ளார். இந்த திறப்பு விழாவில் புற்றுநோயால் பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனுக்கு ஒரு லட்சம் ரூபாயை ரொக்கமாக வழங்கி உதவினார். மேலும் மருத்துவ உதவி கேட்டு வருபவர்களுக்கு தன்னால் முடிந்தவரை உதவி செய்வேன் என்று மகன் ஜெகந்த் தெரிவித்துள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow