பூக்கள் விலை கிடு கிடு உயர்வு : மல்லிகைப் பூ கிலோ ரூ 5 ஆயிரம் 

கடும் பனிபொழிவு காரணாக பூக்கள் விலைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பூக்களின் விலை கிடுகிடு உயர்ந்துள்ளது. 

பூக்கள் விலை கிடு கிடு உயர்வு : மல்லிகைப் பூ கிலோ ரூ 5 ஆயிரம் 
Flower prices skyrocket

தமிழகத்தின் மிகப்பெரிய மலர் சந்தையான குமரி மாவட்டம் தோவாளை மலர்ச்சந்தையில் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் பூக்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் பூக்கள் தோவாளை மலர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இங்கிருந்து திருவனந்தபுரம் உள்பட கேரள மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் விற்பனைக்காகப் பூக்கள் வாங்கிச் செல்லப்படுகின்றன. மற்ற மாவட்ட மலர் சந்தைகளை ஒப்பிடுகையில் தோவாளை மலர்ச் சந்தையில் பூக்களின் விலை குறைவாக இருக்கும். இங்கு பூக்களின் வரவு, தேவை, விற்பனையைப் பொறுத்து விலைகளில் அடிக்கடி மாற்றம் ஏற்படும்.

அந்தவகையில் பூக்கள் வரத்து குறைவு காரணமாகவும், கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு காரணமாகவும் குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் மல்லிகைப்பூ கிலோ ரூ.5000ஆக உயர்ந்துள்ளது. நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதாலும் மற்றும் தமிழ்நாட்டில் நிலவி வரும் பனிப்பொழிவு காரணமாகவும் தோவாளை மலர் சந்தையில் பிச்சிப்பூ வரத்து குறைந்துள்ளது.

இதன் காரணமாக விலை கடுமையாக அதிகரித்துள்ளது. பிச்சிப்பூ ரூ.2500 வாடாமல்லி கிலோ ரூ.60க்கும், செவ்வந்தி கிலோ ரூ.120க்கும், சம்பங்கி கிலோ ரூ.240க்கும், விற்பனையாகிறது. தாமரை ஒரு பூ ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. பூக்களின் விலை உயர்வு வாடிக்கையாளர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow