"கோரிக்கைகளை செவி சாய்க்காத அரசு" - பகல், இரவாக போராட்டத்தில் குதித்த வருவாய்த் துறையினர்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பகல்-இரவாக காத்திருப்பு போராட்டம்

Mar 4, 2024 - 21:55
"கோரிக்கைகளை செவி சாய்க்காத அரசு" - பகல், இரவாக போராட்டத்தில் குதித்த வருவாய்த் துறையினர்

தமிழ்நாடு முழுவதும் வருவாய்த் துறையினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பகல்-இரவாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் வருவாய்த்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சான்றிதழ் வழங்கும் பணிக்கான புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். 2024 நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள முழுமையாக நிதி ஒதுக்கீட்டு செய்ய வேண்டும். சிட்டாப்பணிகளை செம்மையாக மேற்கொள்ள உரிய கால அவகாசம் மற்றும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் இதற்கு முன் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் இதுவரை அரசு தங்கள் கோரிக்கையை பரிசீலித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என வேதனை தெரிவிக்கும் அவர்கள், இன்று (04-03-2024) முதல் காத்திருப்பு போராட்டத்தை இரவிலும் தொடர்கின்றனர். 

அதன்படி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதேப்போல கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று பகல் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 80-க்கும் மேற்பட்ட அலுவலர்கள், இரவிலும் தங்களது போராட்டத்தை தொடர்கின்றனர்.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow