திமுக அரசு மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை வைத்த பிரதமர்... ஆடிபோன அண்ணா அறிவாலயம்...
தமிழ்நாட்டில் திமுக குடும்பம் கொள்ளையடித்த பணத்தை மொத்தமாக மீட்டு, மக்களுக்கே செலவு செய்வேன், இது மோடி அளிக்கும் உத்தரவாதம் என்று சென்னை நந்தனத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி ஆவேசமாக கூறியிருக்கிறார்.
சென்னை நந்தம் ஒய்எம்சிஓ மைதானத்தில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். வணக்கம் சென்னை என்று உரையை தொடங்கிய பிரதமர் மோடி, ஒவ்வொரு முறையும் சென்னைக்கு வரும் போது தமிழர்களால் தனக்கு சக்தி உருவாவதாக குறிப்பிட்டார். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் சென்னை வாசிகள் முக்கிய பங்காற்றுவதாகவும் பெருமிதம் தெரிவித்தார். தாம் தமிழ்நாட்டிற்கு வரும் போதெல்லாம் சிலருக்கு வயிற்றில் புளியை கரைப்பதாக பிரதமர் மோடி கூறியதும், பொதுக் கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் ஆர்வாரம் செய்தனர்.
சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பொதுமக்கள் அவதியடைந்த போது திமுக அரசு மக்களுக்கு உதவாமல், அவர்களை மேலும் அவதிக்குள்ளாக்கிவிட்டு, மத்திய அரசு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை என்று திமுக அரசு அப்பட்டமான பொய்யை தெரிவித்து வருவதாகவும் பிரதமர் மோடி கடுமையாக சாடினார். அனைத்து துறைகளிலும் மத்திய அரசு வளர்ச்சித் திட்டங்களை மேம்படுத்தி வரும் நிலையில் அவற்றில் கொள்ளையடிக்க முடியாததால் திமுகவினர் பயங்கர எரிச்சலில் இருப்பதாகவும், அதனால் தான் மத்திய அரசின் திட்டங்களில் ஸ்டிக்கரை ஒட்டி பொய் பிரசாரம் செய்து வருவதாகவும் பிரதமர் விமர்சித்தார்.
திமுக குடும்பம் கொள்ளையடித்த பணம் மொத்தமும் வசூலிக்கப்பட்டு தமிழக மக்களுக்கே செலவு செய்யப்படும், இது மோடி அளிக்கும் உத்தரவாதம் என்று பிரதமர் உறுதிப்பட தெரிவித்தார். தனக்கு குடும்பம் இல்லை என்று எதிர்கட்சிகள் கூறிவருவதாக தெரிவித்த பிரதமர் மோடி, அவர்களுக்கு குடும்பம் தான் பிரதானம் என்பதால் நாட்டை கொள்ளையடித்து வருவதாக கடுமையாக சாடினார். ஆனால் தமக்கு நாடு தான் குடும்பம், நாட்டு மக்கள் தான் குடும்ப உறுப்பினர்கள் என்றும் தெரிவித்தார். அப்போது, மோடி மோடி என்று பாஜக தொண்டர்கள் ஆரவாரம் செய்ததுடன் செல்போனில் டார்ச் அடித்து தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள கட்சியின் ஆதரவோடு போதைப்பொருள்கள் தங்கு தடையின்றி கிடைப்பதாக குற்றஞ்சாட்டிய பிரதமர்,வருங்கால சந்ததியினரின் நலனில் அக்கறையின்றி மாநில அரசு செயல்படுவதாக சாடினார். நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் பிரதமரின் இந்த பொதுக்கூட்டம் தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
What's Your Reaction?