விஜயதரணி ராஜினாமாவால் விளவங்கோடு தொகுதி காலி..! சட்டப்பேரவை செயலாளர் கடிதம்..!

Feb 26, 2024 - 20:05
Feb 26, 2024 - 20:10
விஜயதரணி ராஜினாமாவால் விளவங்கோடு தொகுதி காலி..! சட்டப்பேரவை செயலாளர் கடிதம்..!

விஜயதரணி ராஜினாமா செய்ததையடுத்து விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். இதனால் அங்கு மக்களவை தேர்தலோடு இடைத் தேர்தலும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி காங்கிரஸ் மீதான அதிருப்தியில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவுக்கு விஜயதரணி தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில், விஜயதரணி ராஜினாமாவால் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் கடிதம் எழுதியுள்ளார். இதையடுத்து, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலையும் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நடந்தால், நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நாளில், விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow