'பேசாம இவன ஆன்டி இண்டியன்னு சொல்லிடலாமா?'... தெறிக்க விடும் 'இந்தியன் 2' டிரெய்லர்!

''காந்திய வழியில் நீங்க; நேதாஜி வழியில் நான்'' என்று கமல்ஹாசன் பேசும் வசனம் படம் முழுவதும் இந்தியன் தாத்தா, ஊழல் அரசியல்வாதிகளை பின்னி பெடலெடுக்க போகிறார் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

Jun 25, 2024 - 20:00
'பேசாம இவன ஆன்டி இண்டியன்னு சொல்லிடலாமா?'... தெறிக்க விடும் 'இந்தியன் 2' டிரெய்லர்!
இந்தியன் 2

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள 'இந்தியன் 2' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 'உலக நாயகன்' கமல்ஹாசன் நடித்துள்ள 'இந்தியன் 2' திரைப்படம் அடுத்த மாதம் உலகம் முழுவதும் வெளியாகிறது. 1996ம் ஆண்டு ரிலீஸாகி மெகா ஹிட்டான 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகியுள்ளது. 

இந்த படத்தில் கமலுடன் சித்தார்த்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், மறைந்த விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'இந்தியன் 2' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

அதன்பிறகு பாடல்கள் வெளியான நிலையில், அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில், 'இந்தியன் 2' படத்தின் டிரெய்லர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகி உள்ளது. படத்தயாரிப்பு நிறுவனமான லைகா, யூடியூப்பில் 'இந்தியன் 2' டிரெய்லரை வெளியிட்டுள்ளது.

சுமார் 2.38 நிமிடங்கள் வீடியோவாக ஓடும் இந்த டிரெய்லர், ''ஊராடா இது... படிப்புக்கு ஏற்ற வேலை இல்ல; வேலைக்கு ஏற்ற சம்பளம் இல்ல; கட்ற டேக்ஸுக்கு (வரி) சரியான ஸ்பெஷலிட்டி. திருடன் திருடிட்டுதான் இருக்க போறான். தப்பு செய்றவன் தப்பு செஞ்சிட்டுதான் இருப்பான்'' என்ற வெறித்தமான டயலாக்குடன் தொடங்குகிறது.

டிரெய்லரில் நடிகர் சித்தார்த் உரிமைகளுக்கு போராடும் இளைஞராக காட்டப்படுகிறார். ஒருபக்கம் போராட்டம் நடைபெறும் நிலையில், ''நம்ம ஆளாளுக்கு ஊரை குறை சொல்லிகிட்டு இருக்கோம். சிஸ்டம் சரியில்லை, சரியில்லை என்று வாய் கிழிய பேசுறோம். ஆனால் அதை சரி செய்தற்கு ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை'' என்று சித்தார்த் ஆக்ரோஷமான வசனங்களை பேசுகிறார்.

'எல்லோரையும் கடிச்சி குதற ஒரு 'HUNGTING DOG' வரணும் என சித்தார்த் பேசும்போது, 'இந்தியன் தாத்தா' கமல்ஹாசன் கம்பீரமாக entry கொடுக்கிறார். கமல்ஹாசன் டிரெய்லரில் பழைய  காக்கி சட்டை, அரைக்கால் டவுசர் கெட்டப் உள்பட 4 கெட்டப்புகளில் தோன்றுகிறார்.

இதில் ஒரு கெட்டப்பில் கமல்ஹாசன் மேற்கொள்ளும் சண்டை காட்சி புல்லரிக்க வைக்கிறது.  'பேசாம இவன ஆன்ட்டி இண்டியன்னு சொல்லிடலாமா?' என்ற நடப்பு கால அரசியல் வசனமும் இடம்பெற்றுள்ளது. 

''காந்திய வழியில் நீங்க; நேதாஜி வழியில் நான்'' என்று கமல்ஹாசன் பேசும் வசனம் படம் முழுவதும் இந்தியன் தாத்தா, ஊழல் அரசியல்வாதிகளை பின்னி பெடலெடுக்க போகிறார் என்பதை எடுத்துக் காட்டுகிறது. இது தவிர சில அரசியல் குறியீடுகளும் டிரெய்லரில் தென்படுகின்றன. 

''கடைசியில் ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது... டாம் அண்ட் ஜெர்ரி ஆட்டம் தொடங்குகிறது'' என்று இந்தியன் தாத்தா பேசும் வசனத்துடன் டிரெய்லர் முடிகிறது. 

மறைந்த நடிகர் மனோபாலா, சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் டிரெய்லரில் தோன்றுகின்றனர். ஒளிப்பதிவு மிக அருமையாக உள்ளது. அனிருத்தின் பின்னணி இசை டிரெய்லரில் மிரள வைக்கிறது. டிரெய்லரை பார்க்கும்போது 'இந்தியன் தாத்தா வந்து வசூலில் தியேர்ட்டர்களை அலற விடப்போறாரு' என்பது தெளிவாகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow