"வெள்ளை நிற பஞ்சு மிட்டாய்க்கு தடையில்லை"... அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவிப்பு.!
புற்றுநோய் உண்டாக்கும் வேதிப் பொருட்கள் இருப்பதால் தமிழ்நாட்டில் இளங்சிவப்பு பஞ்சுமிட்டாய் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் விதிகளை மீறி ரசாயனம் கலந்திருப்பது தெரியவந்ததையடுத்து சென்னையில் பொது இடங்களில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சுமிட்டாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில் பஞ்சு மிட்டாயில் "ரோடமைன் பி" என்ற நச்சுப்பொருள் கலந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தமிழ்நாட்டில் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடைவிதிப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று அறிவித்தார். இந்நிலையில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பிறந்த நாளையொட்டி, புதுச்சேரி மாநில திமுக சார்பில், கடலூர் சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், வண்ணம் கலக்கப்பட்ட பஞ்சு மிட்டாய்க்குத்தான் தான் தடை வெண்மை நிற பஞ்சு மிட்டாய் விற்க தடையில்லை என்றார்.
மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிந்தே பொய் சொல்கிறார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆலோசனை....!
What's Your Reaction?