நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆலோசனை....!

பனையூரில் நாளை நடைபெறுவதாக அறிவிப்பு...!

Feb 18, 2024 - 13:14
Feb 18, 2024 - 14:21
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆலோசனை....!

கட்சிப் பெயரில் இருந்த இலக்கணப் பிழையை சரி செய்த நிலையில், மாவட்ட தலைமை நிர்வாகிகள் கூட்டத்திற்கு நடிகர் விஜய் ஏற்பாடு  செய்துள்ளார். 

தமிழ் திரையுலகில் முக்கிய பிரபலமான நடிகர் விஜய் கடந்த 3ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதுதான் இலக்கு என்று விஜய் அறிவித்திருந்தார். 

தமிழக வெற்றி கழகத்தின் பெயரில் இலக்கணப் பிழை இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து கட்சியின் பெயரில் "க்" சேர்த்து தமிழக வெற்றிக் கழகம் என்று மாற்ற நடிகர் விஜய் ஒப்புதல் அளித்தார். இதைத் தொடர்ந்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட தலைமை நிர்வாகிகள் கூட்டம் நாளை நடைபெறுவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நாளை காலை 9 மணிக்கு உறுப்பினர் சேர்க்கை, உட்கட்சிக் கட்டமைப்பு  விரிவாக்கம் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க  |  "ஆளே இல்ல, பெல்லு..!" காலியான இருக்கைகளுக்கு ஆர அமர பாடம் எடுத்த அமைச்சர்.. ஓ இவரா ?!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow