வயநாட்டில் வனவிலங்கு தாக்கி 4 பேர் பலியான விவகாரம்.... குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறிய ராகுல்...!
வயநாட்டில் யானை தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 20 நாட்களில் காட்டு யானை தாக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி வனத்துறையினர் கடையடைப்பு, சாலை மறியல் என பலகட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வனத்துறை வாகனத்திற்கு மலர் வளையம் வைத்தும் வாகனத்தின் டயர்களை பஞ்சர் செய்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வடமாநிலங்களில் பாரத ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி அதனை தற்காலிகமாக நிறுத்தியுள்ளார். தனது தொகுதியான வயநாட்டில் யானை தாக்கி 4 பேர் உயிரிழந்ததையடுத்து வயநாடு விரைந்து வந்த ராகுல்காந்தி,வனவிலங்குகள் தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு ராகுல்காந்தி ஆறுதல் கூறினார். அதோடு, உயிரிழந்த அஜீஸ் என்பவரின் வீட்டுக்குச் சென்ற ராகுல் காந்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் போராட்டம் நடத்தி வரும் பொதுமக்களையும் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதையும் படிக்க | பல்வேறு துறைகளில் நலத்திட்டங்கள்... காணொலி மூலம் தொடங்கி வைத்த முதலமைச்சர்..!
What's Your Reaction?