நான் ஜெயிச்சிட்டேன்.. வெற்றி பெற்றதாக அறிவித்து கொண்ட பிரபோவோ.. இந்தோனேசியா அதிபர் தேர்தலில் பரபர..!

Feb 15, 2024 - 16:36
நான் ஜெயிச்சிட்டேன்.. வெற்றி பெற்றதாக அறிவித்து கொண்ட பிரபோவோ.. இந்தோனேசியா அதிபர் தேர்தலில் பரபர..!

இந்தோனோசியாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் சுமார் 57 சதவீத வாக்குகளை பெற்ற நிலையில் வெற்றி பெற்றதாக அதிபர் வேட்பாளர் பிரபோவோ சுபியாண்டே அறிவித்து கொண்ட நிலையில், அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவில் 14ஆம் தேதி  அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பொதுமக்கள் தங்களது வாக்கினை செலுத்தினர். அதிபர் தேர்தலையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தது.  தற்போதைய அதிபராக இருந்த ஜோக்கோ விடோடோ தேர்தலில் போட்டியிடாமல் விலகிக் கொண்டார்.

அதிபர் தேர்தலில் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக பிரபோவோ சுபியாண்டோ, முன்னாள் மாகாண ஆளுநர்கள் அனீஸ் பஸ்லேடன், கஞ்சர் பிரனோவோ ஆகியோர் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தலில் வெற்றி பெற ஒரு வேட்பாளர் 50 சதவீத வாக்குகளை பெற வேண்டும். 

இந்நிலையில் தேர்தல் முடிந்த நிலையில் மாலையே வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. இதில் பிரபோவோ சுபியாண்டே தொடர்ந்து முன்னிலை வகித்தார். இந்நிலையில் அதிபர் தேர்தலில் பிரபோவோ 57 முதல் 59 சதவீதம் வரை வாக்குகள் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் அவர் தேர்தலில் வெற்றி பெற்று உள்ளார். 

அதே வேளையில் தேர்தல் முடிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையே தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய பிரபோவோ, அதிபர் தேர்தலில் சுமார் 57 சதவீத வாக்குகளை பெற்ற நிலையில் வெற்றி பெற்றதாகவும், இந்த வெற்றி அனைத்து இந்தோனேசியர்களின் வெற்றி என கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow