தமிழுக்கே தடுமாறிய தம்பி..! ஆட்சியர் முன் அவமானம்..! அசிங்கப்படுத்தும் நெட்டிசன்கள்..!
திருவள்ளூர் மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தேர்தல் வேட்புமனு உறுதிமொழி வாசிக்கத் தெரியாமல் திணறினார்.
திருவள்ளூர் மக்களவை தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்த நாம் தமிழர் வேட்பாளர், உறுதிமொழி படிக்க தெரியாமல் தேர்தல் அலுவலரின் உதவியை நாடிய சம்பவம் நகைப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேடைக்கு மேடை தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் நலன் குறித்து நரம்பு முறுக்கேற்றி பேசும் சீமான், தமிழ் படிக்க தெரிந்த வேட்பாளர்களை தேர்வு செய்யாமல் போய்விட்டாரோ என்ற கேள்வி தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது தம்பிமார்கள் வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது, தமிழில் உள்ள உறுதிமொழியை படிக்க தெரியாமல் திருதிரு வென முழித்து வருகின்றனர்.
திருவள்ளூர் தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் ஜெகதீஷ் சுந்தர், வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றிருந்தார். அப்போது தேர்தல் அதிகாரி முன்னிலையில் உறுதிமொழி வாசிக்காமல் நிற்க, அருகில் இருந்த ஊழியரை சொல்லிக்கொடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.
எப்படி வாசிக்க வேண்டும் என கூறிவிட்டு அந்த ஊழியர் தனது பணியை தொடர்ந்த நிலையில், நாம் தமிழர் வேட்பாளராக ஜெகதீஷ் சுந்தர் உறுதிமொழியை வாசிக்காமல் வெறும் வாயை மெல்ல, கூட வந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி நிலைகுலைந்து பார்த்துள்ளார். ரொம்ப நேரம் ஆட்சி பேச்சு மூச்சக் காணும்னு shock-ஆகி பார்த்துள்ளார். இதை பார்த்துக் கொண்டிருந்த தேர்தல் நடத்தும் அதிகாரி, விட்டால் இரவு வரைக்கும் இப்படியே நிற்பார் என "ஜெகதீஷ் சுந்தர் எனும் நான்" என வண்டியை ஸ்டார் பண்ணி விட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் வாசிக்க, அதைக்கேட்டு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் REPEAT பண்ண, அருகில் இருந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி என்னடா இது சோதனைனு விட்டத்த பார்த்தபடியே இருந்துள்ளார்.
எப்படியோ தட்டி தடுமாறி உறுதிமொழியை வாசித்து முடித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஷ் சுந்தரின் முகம், ஏதோ தேர்தலிலேயே வெற்றிப்பெற்றது போல் மின்னியுள்ளது
What's Your Reaction?