நாவை அடக்கி பேச வேண்டும்: விஜய்க்கு எதிராக செல்லூர் ராஜூ கொந்தளிப்பு

நாவை அடக்கி பேச வேண்டும். அதிமுக களத்தில் இல்லை என சொல்வது முட்டாள் தனம் என தவெக தலைவர் விஜய்க்க எதிராக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கொந்தளித்துள்ளார். 

நாவை அடக்கி பேச வேண்டும்: விஜய்க்கு எதிராக செல்லூர் ராஜூ கொந்தளிப்பு
You should hold your tongue and speak

ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், களத்தில் இல்லாதவர்களை நாங்கள் எதிர்க்க மாடோம் என கூறியிருந்தார். இதற்கு அதிமுக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. விஜயின் இந்த கருத்திற்கு எதிராக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கொந்தளித்துள்ளார். 

இதுகுறித்து மதுரையில் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறுகையில்: தவெகவுக்கு கடையை விரித்து வைத்துவிட்டு வியாபாரம் ஆகாமல் போகப் போகிறது. பரப்புரைக்கு நயன்தாரா வந்தால்கூட கூட்டம் கூடும். நடிகருக்கு கூடுதலாக ரசிகர்கள் இருக்கலாம்; எல்லோரும் எம்ஜிஆராக முடியாது. நாங்கள் களத்தில் இருக்கிறோமா, இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். ஒரே சந்திரன்... ஒரே எம்ஜிஆர்தான் 

எங்களை களத்தில் இல்லை என சொல்ல எவ்வளவு தைரியம். நாவை அடக்கி பேச வேண்டும். அதிமுக களத்தில் இல்லை என சொல்வது முட்டாள் தனம். விஜய் இதுவரை எத்தனை தேர்தல்களில் போட்டியிட்டுளார் ? அவருக்கு என்ன பின்புலம் ? . எத்தனை இடைத்தேர்தலில் விஜய் போட்டியிட்டு இருக்கிறார். என விஜய்க்கு எதிராக தனது கோபத்தை செல்லூர் ராஜூ வெளிப்படுத்தி உள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow