134 பேர் பலியான மாஸ்கோ தாக்குதல்... வெள்ளை பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் அஞ்சலி...
மாஸ்கோ தாக்குதலில் 134 பேர் உயிரிழந்த நிலையில், பூச்செண்டுகள் வைத்து, வெள்ளை நிற பலூன்கள் பறக்கவிட்டு பொதுமக்கள் அஞ்சலி.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ தாக்குதலில் 134 பேர் உயிரிழந்த நிலையில், பூச்செண்டுகள் வைத்து, வெள்ளை நிற பலூன்கள் பறக்கவிட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
மாஸ்கோவின் க்ரோகஸ் மாலில் உள்ள அரங்கில், கடந்த மார்ச் 24ம் தேதி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கு ISIS தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 134 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 551 பேர் படுகாயமடைந்தனர். மிகக் கொடூரமாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
மிகமோசமான இந்தத் தாக்குதலுக்கு ஈரானில் இருந்து செயல்படும் ISIS அமைப்பின் பிரிவான ISIS-K அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பாக 9 பேர் தஜிகிஸ்தான் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் விளாதிமி புதின் பேசிய வீடியோ வெளியானது. அதில், “காட்டுமிராண்டித்தனமான இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்படும். சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்படுவர். கொடூரமான தாக்குதலில் ஏராளமான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தப்பட்ட நாளான மார்ச் 22ம் தேதியை 'தேசிய துக்க தினமாக' அறிவிக்கிறேன்” என தெரிவித்தார்.
இந்நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் தாக்குதல் நடந்த இடத்தில் கூடி, பூச்செண்டுகள் வைத்து, வெள்ளை நிற பலூன்களை வானில் பறக்கவிட்டு தங்களது அஞ்சலியைச் செலுத்தினார்கள்.
What's Your Reaction?