"காசாவில் போர் நிறுத்தம் தேவை..." கமலா ஹாரிஸ் அழைப்பு !!
காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் அவசியம் என அமெரிக்க துணைஅதிபர் கமலா ஹாரிஸ் வலியுறுத்தியுள்ளார்.
பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்திருந்த இஸ்ரேல் மீது காசாவில் இருந்து கடந்த அக்டோபர் 7ம் தேதியன்று ஹமாஸ் அமைப்பு போர் தொடுத்தது. அதில் ஆயிரத்து 400 பேர் உயிரிழந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலில் காசாவில் 30,000க்கும் மேற்பட்டோர் பலியாகினர். தொடர்ந்து போரை நிறுத்த ஐ.நா. பொதுசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டாலும், இஸ்ரேல் அதனை பொருட்படுத்தவில்லை. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் போர் நிறுத்த தீர்மானம் கொண்டுவரும் போதெல்லாம், அமெரிக்கா தனது வீட்டா அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை ரத்து செய்ய வைத்தது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், காசாவில் உடனடி போர் நிறுத்தம் தேவை என அமெரிக்க துணைஅதிபர் கமலா ஹாரிஸ் வலியுறுத்தியுள்ளார். பாலஸ்தீனியர்கள் மீதான மனிதாபிமானப் பேரழிவு நடவடிக்கைகளை தொடர்வதை இஸ்ரேல் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ள அவர், தொடர்ந்து காசாவுக்குள் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதற்கு இஸ்ரேல் வழிவகை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?