முதல்வன் பட இண்டர்வெல் Scene-ஆ..? இல்ல திமுக பிரசார கூட்டமா..? நீண்ட டிராஃபிக்கால் நொந்த மக்கள்

அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு, 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசை கட்டி நின்றன.

Apr 7, 2024 - 16:33
முதல்வன் பட இண்டர்வெல் Scene-ஆ..?  இல்ல திமுக பிரசார கூட்டமா..? நீண்ட டிராஃபிக்கால் நொந்த மக்கள்

திருவள்ளூர் அருகே காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து திமுகவினர் பிரதான சாலையில் பிரசாரம் மேற்கொண்டதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நீண்ட தூரம் வரிசை கட்டி நின்ற வாகனங்களால் கொளுத்தும் வெயிலில் பொதுமக்கள் வெந்து நொந்தனர். 

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் IAS அதிகாரி சசிகாந்த் செந்திலை ஆதரித்து, திமுக கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ TJS.கோவிந்தராஜ் பிரசாரம் செய்தார். அப்போது திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை இடையிலான பிரதான சாலையின் நடுவே மேளதாளத்துடன் குத்தாட்டம் போட்டு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.  

அப்போது அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு, 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசை கட்டி நின்றன. இது பார்க்க முதல்வன் திரைப்பட இண்டர்வெல் சீன் போல தோன்றியது. வெயில் ஒருபக்கம் கொளுத்த, மறுபக்கம் டிராஃபிக்கில் சிக்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வியர்த்து வெடவெடத்து போனார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow