தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தில்.. ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்குகிறது.. இல்லத்தரசிகள் கலக்கம்

வரலாறு காணாத அளவிற்கு தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது. தங்கம் ஒரு சவரன் 54,000 ரூபாயை நெருங்கியுள்ளதால் இல்லத்தரசிகள் கலக்கமடைந்துள்ளனர்.

Apr 10, 2024 - 10:04
தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தில்.. ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்குகிறது.. இல்லத்தரசிகள் கலக்கம்

தங்கம் இந்திய பெண்களின் முதலீடுகளில் முக்கியமானது. திருமணத்தின் போது மகள்களுக்கு சீதனம் தருவதற்காகவே தங்கத்தை வாங்கி சேகரிப்பார்கள். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு சவரன் தங்கம் 5000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.6700 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த மார்ச் மாதம் முதலே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வார காலமாகவே 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சம் தொட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ. 50 ஆயிரத்தை எட்டியது.

கடந்த சில நாட்களாகவே தினசரியும் தங்கம் 500 ரூபாய் வரை உயர்ந்து வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 10) கிராமுக்கு ரூ. 35 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,705-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு இன்றைய தினம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.280  உயர்ந்து  ஒரு சவரன் தங்கம் ரூ.53,640ஆக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களில் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 3700 ரூபாய் உயர்ந்துள்ளது. 

சீன, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் டாலருக்கு பதிலாக தங்கத்தை வாங்கிக் குவித்து வருகின்றனர். தங்கத்தில் முதலீடு அதிகரித்து வருவதால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நகைக்கடைகளில் ஒரு சவரன் செய்கூலி சேதாரத்துடன் சேர்த்து 60,000 வரை விற்பனை செய்யப்டும். தங்க நகை விலை உயர்வினால் நடுத்தர மக்களும், நகைப்பிரியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏழைகளுக்கு எட்டாக்கனியாகுமா தங்கம் விலை என்ற ஏக்கம் எழுந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow