கொத்துக் கொத்தாய் செத்து விழுந்த கோழிகள்..! இனி இறைச்சி விற்பனைக்கு தடை..! எங்கே தெரியுமா?
ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் எதிரொலியாக பல்லாயிரக்கணக்கான கோழிகள் இறந்த நிலையில், மூன்று மாதங்களுக்கு கோழி இறைச்சி விற்பனைக்கு தடைவிதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லூர் மாவட்டம், பொதலகூரு அருகே உள்ள கும்மிடிதிப்ப கிராமத்தில் பறவை காய்ச்சல் காரணமாக அங்கு பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த பல்லாயிரக்கணக்கான கோழிகள் நான்கு நாட்களுக்கு முன் இறந்துவிட்டன.
இது குறித்த தகவலின் பேரில் அங்கு சென்ற அதிகாரிகள் இறந்து போன கோழிகளின் உடல்களில் இருந்து ரத்த மாதிரிகளை சேகரித்து போபாலில் உள்ள ஆய்வகத்திற்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து கிடைக்க பெற்ற முடிவுகள் அடிப்படையில் பறவை காய்ச்சல் ஏற்பட்டு கோழிகள் இறந்து போனது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பறவை காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்கவும், மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கவும் நெல்லூர் மாவட்ட ஆட்சியர் ஹரி நாராயண் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்கு பின் பறவை காய்ச்சல் தாக்கி கோழிகள் இறந்த ஊரிலிருந்து 1 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கும் கிராமங்கள், நகரங்கள் ஆகியவற்றில் மூன்று மாதங்களுக்கு கோழி இறைச்சி விற்பனை கடைகளை திறக்க தடை விதித்தும், ஒரு கிலோ மீட்டர் முதல் 10 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இருக்கும் கிராமங்கள், நகரங்கள் ஆகியவற்றில் மூன்று நாட்கள் வரை கோழி இறைச்சி விற்பனை கடைகளை திறக்க தடைவிதித்தும், வெளியூர்வாசிகள் கறிக்கோழிகளை வாங்கிச் செல்ல 15 நாட்கள் தடை விதித்தும் உத்தரவு பிறப்பித்தார்.
ஆட்சியரின் உத்தரவுப்படி, கோழி இறைச்சி விற்பனை கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் கும்மலதிப்பா பகுதிக்கு கறிக்கோழிகளை ஏற்றிச் செல்ல லாரிகள் செல்லாத வகையில் கண்காணிப்புகளை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
What's Your Reaction?