சீமானுக்கு சிக்கல் மேல் சிக்கல் : கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கீடு

கரும்பு விவசாயி சின்னத்தை மணிப்பூரை சேர்ந்த இந்தியக் குடியரசு கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதால, நாம் தமிழர் கட்சி சீமானுக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. 

சீமானுக்கு சிக்கல் மேல் சிக்கல் : கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கீடு
சீமானுக்கு சிக்கல் மேல் சிக்கல்

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 2021 சட்டசபைத் தேர்தல் வரை கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு வந்தது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலின் போது நாதகவுக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கரும்பு விவசாயி சின்னத்தை பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

நாடாளுமன்றத் தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டியிட்ட சீமானின் நாம் தமிழர் கட்சி, 8.19 சதவிகித வாக்குகளை பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அந்தஸ்தை பெற்றது. இதன் பின்னர் தங்களுக்கு விவசாயி சின்னம் வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் நாம் தமிழர் கட்சி கேட்டது. இதை தொடர்ந்து நாம் தமிழர் கட்சி நிகழ்ச்சிகளில் கலைப்பையுடன் இருக்கும் விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. 

இந்நிலையில், மணிப்பூரைச் சேர்ந்த இந்தியக் குடியரசுக் கட்சி தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் தற்போது ஒதுக்கியுள்ளது. 2016 முதல் 2021 வரை சீமானின் நாதக போட்டியிட்டு வந்த கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

தற்போது சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கலப்பை விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் சட்டசபைத் தேர்தலின் போது கலப்பை விவசாயி சின்னமும், கரும்பு விவசாயி சின்னமும் அருகருகே இருந்தால், வாக்காளர்கள் பெரும் குழுப்பம் ஏற்படும். இதனால் நாம்தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு செல்ல வேண்டிய வாக்குகள், இந்திய குடியரசுக் கட்சி செல்லும் நிலைக்கு தள்ளப்படுவர்.

ஏற்கனவே விஜய் புதிய கட்சி தொடங்கியிருப்பதால், இளைஞர்கள் வாக்கு தவெகவிற்கு செல்லும் என கூறப்படுகிறது. இதனிடையே சின்னத்தால் ஏற்படும் குழுப்பம் காரணமாக வாக்கு சதவிகிதத்தில் சரிவு ஏற்படும் என்ற அச்சம் சீமானுக்கு ஏற்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow