அன்புமணி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்க : டெல்லி காவல் நிலையத்தில் ஜி.கே. மணி புகார்
பாமக தலைவர் விவகாரத்தில் அன்புமணி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என டெல்லி காவல்நிலையத்தில் ஜி.கே.மணி புகார் அளித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி என தேர்தல் ஆணையம் ராமதாசு தரப்பிற்கு கடிதம் அனுப்பி இருந்தது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடி கொள்ளவும் ராமதாசு தரப்பிற்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது.
இதை தொடர்ந்து டெல்லி நீதிமன்றத்தில் ராமதாசு தரப்பு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் நேற்றைய முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது பாமக உள்கட்சி விவகாரத்தால் மாம்பழம் சின்னத்தை முடக்க போவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது. மேலும் இந்த வழக்கை கிரிமினல் நீதிமன்றத்தை நாட டெல்லி நீதிமன்றம் ராமதாசு தரப்பிற்கு உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில் டெல்லி முகாமிட்டுள்ள ராமதாசு ஆதரவாளர் ஜி.கே.மணி. இன்று டெல்லி நாடாளுன்ற ஸ்ட்ரீட் காவல்நிலையத்தில் அன்புமணி மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். தேர்தல் ஆணையத்தில் பொய்யான ஆவணங்களை கொடுத்து ஏமாற்றி உள்ளார் என்றும்.
அதனால் அன்புமணி மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜி.கே.மணி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் பாமகவில் மேலும் சலசலப்பை அதிகரித்து உள்ளது.
What's Your Reaction?

