திருப்பதி கோவிலை டிரோன் மூலம் நோட்டமிட்ட வெளிநாட்டவர் இருவர் கைது
திருப்பதி ஏழுமலையான கோவிலை டிரோன் மூலம் வீடியோ, புகைப்படம் மூலம் நோட்டமிட்ட இரண்டு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலின் புனிதத்தை காக்கும் வகையில் கோவில் மீது விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆளில்லா டிரோன்கள் பறக்க தடை உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை சேர்ந்தவர் சர்வ லக்ஷன் தாஸ். ஆந்திர மாநிலம், ஒங்கோலை சேர்ந்தவர் பானு சந்தர். இருவரும் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர்.ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நேற்று திருப்பதி வந்தனர். பஸ்சில் ஏறி திருப்பதி மலைக்கு சென்றனர். திருப்பதி மலையில் உள்ள கல் வளைவு என்ற பகுதியில் தாங்கள் கொண்டு வந்த டிரோன்களை பறக்க விட்டு படம் பிடித்தனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். தேவஸ்தான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரையும் பிடித்து டிரோன்களை பறிமுதல் செய்தனர். பிடிபட்டவர்களை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான கோவிலை பகுதியில் விமானம், ஹெலிகாப்டர், டிரோன்கள் பறக்க நிரந்தர தடை உள்ளது. இதனை மீறி இரண்டு வெளிநாட்டவர்கள் டிரோன்களை பறக்க செய்த சம்பவம் திருப்பதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?

