ராம்நாட் ரவுடிகள்.. தொடர் கொள்ளை.. வழிப்பறி செய்த இருவர் மீது பாய்ந்த குண்டாஸ்
ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் வழிப்பறி உள்ளிட்ட தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்ட இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கீழக்கரை கிழக்கு தெருவை சேர்ந்த முகமதுகான் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சதாம் உசேனும் தொடர்ந்து சுற்றுவட்டார பகுதிகளில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பல கொள்ளை சம்பவங்கள் புரிந்த இவர்கள் காவலர் இருந்து தப்பிக்காத வகையில் குண்டர் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் பலரும் எதிர்பார்த்தனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் தொடர்ந்து இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால்,இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் எஸ்.பி சந்தீஷ் பரிந்துரை செய்தார். இதனை ஏற்று மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் குற்றவாளிகளான சதாம் உசேன் மற்றும் முகமது கான் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
What's Your Reaction?