புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டது ஏன்?... தமிழ்நாட்டில் மத்திய அமைச்சர்கள் விளக்கம்!

தமிழகத்தில் ஒரு சம்பவத்தில் (கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு) 50க்கும் மேற்பட்டோர் இறந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு உடனடியாக நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இது போன்ற புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.

Jun 23, 2024 - 14:24
புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டது ஏன்?... தமிழ்நாட்டில் மத்திய அமைச்சர்கள் விளக்கம்!
புதிய சட்டங்கள்

செங்கல்பட்டு: மக்களுக்கு விரைவாகவும், நியாயமாகவும் தீர்வு கிடைக்க புதிய புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், அர்ஜூன் ராம் மேக்வால்  தெரிவித்துள்ளனர். 

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் உள்ள வேலூர் தொழில் நுட்பக் கல்லூரியில் 'குற்றவியல் நீதி அமைப்பு நிர்வாகத்தில் இந்தியாவின் முற்போக்கு பாதை' என்ற மாநாடு நடந்தது. 

இதன் தொடக்க விழாவில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் நீதி மற்றும் சட்ட விவகாரங்கள் துறை செயலாளர் டாக்டர் ராஜீவ் மணி, கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆஷிஷ் ஜிதேந்திர தேசாய், தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் ஆராதே, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

மேலும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், ராணுவ அதிகாரிகள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் விழாவில் கலந்து கொண்டனர்.

புதிதாக நடைமுறைக்கு வந்துள்ள இந்திய நீதித்துறை சட்டம், இந்திய குடிமை பாதுகாப்பு சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவை முக்கியத்துவம் குறித்து  கருத்தரங்க மாநாட்டில் பங்கேற்ற நீதிபதிகள் எடுத்துரைத்துரைத்தனர். மேலும் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்தும் நீதிபதிகள் பேசினார்கள்.

இந்த விழாவில் சிறப்புரையாற்றிய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கூறியதாவது:- 

இந்தியாவில் ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது.  இந்த சட்டங்களை மாற்றி, புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாகவும் நியாயமாகவும் தீர்வு கிடைக்க இந்த புதிய சட்டங்கள் உதவும்.

இன்றைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய குற்றவியல் சட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. எவிடன்ஸ் ஆக்ட் மற்றும் குற்றவாளிகளை ஆன்லைன் மூலமாகவே நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தலாம். இவ்வாறு அர்ஜூன் ராம் மேக்வால் பேசினார்.

பின்பு பேசிய மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் எல்.முருகன் கூறியதாவது:- பிரதமர் மோடி தனது ஆட்சியில் மூன்று வரலாற்று சிறப்புமிக்க மூன்று சட்டத்தை கொண்டு வந்துள்ளார். 

ஒரு வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்; அதுவும் துரிதமான நியாயம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மூன்று குற்றவியல் சட்டங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 1,500 தேவை இல்லாத சட்டங்களை அகற்றி இருக்கிறோம். 

தமிழகத்தில் ஒரு சம்பவத்தில் (கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு) 50க்கும் மேற்பட்டோர் இறந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு உடனடியாக நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இது போன்ற புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளோம். 

இந்த சட்டங்களை சிலர்  அரசியல் ஆதாயத்திற்காக எதிர்த்து வருகின்றனர். புதிய சட்டங்களை கண்மூடித்தனமாக எதிர்ப்பு சரியல்ல. இந்தியாவில் இன்றைக்கு உள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதனை சட்டத்திற்கு உள்ள கொண்டு வந்து புதிய நடைமுறையை பயன்படுத்த உள்ளோம். 

பிரதமரை பொறுத்தவரை தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்பட நீதிக்கு சமம் என நினைப்பவர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு இந்த சட்டங்கள் நமக்கு உறுதுணையாக இருக்கும். ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த சட்டங்கள் தான் இத்தனை நாள் இந்தியாவில் இருந்தது. 

இந்திய மக்கள்  கலாச்சாரத்திற்கு, நம்முடைய நாட்டிற்கு தேவையான சட்டங்களை பிரதமரும் உள்துறை அமைச்சரும் கொடுத்திருக்கிறார்கள். புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்'' என்று எல்.முருகன் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow