காங்.ஆட்சியில் நிலக்கரி ஏற்றுமதியில் ஊழல்... ரூ.2.86லட்சம் கோடி என மத்திய அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு...
காங்கிரஸ் ஆட்சியில் நிலக்கரி ஏற்றுமதியில் ரூ.2.86லட்சம் கோடி ஊழல் ஏற்பட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரியில் நடைபெற்ற பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது காங்கிரஸ் ஆட்சியில் மிகப்பெரிய ஊழல் நடந்து, நாடே ஊழலில் சிக்கித் தவித்தது மட்டுமல்லாமல், காங்கிரஸ் ஆட்சியில் நிலக்கரி இறக்குமதி செய்ததில் 2 லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் ஊழல் நடந்ததாகவும் குற்றம்சாட்டினார்.
ஆனால் தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஊழல் இல்லா ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், நாட்டு மக்களுக்கும் நாட்டுக்காகவும் சிந்திக்கும் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆக வேண்டும் என்பதற்காக, பாஜக தொண்டர்கள் ஒவ்வொருவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். திமுக-காங்கிரஸ் கட்சிக்கு அவர்களது குடும்பம் தான் தேசம், ஆனால் நரேந்திர மோடிக்கு தேசம் தான் குடும்பம் எனக்கூறிய பிரகலாத் ஜோஷி, என். ஆர். காங்கிரஸ்-பாஜக தொண்டர்கள் ஒற்றுமையாக பணியாற்றி மக்களவைத் தேர்தலில் நிற்கும் பாஜக வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்றார்.
What's Your Reaction?