சென்னை பல்கலைக்கழக வங்கிக் கணக்குகள் முடக்கம் - வருமானவரித் துறை நடவடிக்கை
வருமான வரித்துறையிடம் பல்கலைக்கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது
சென்னை பல்கலைக்கழகத்தைச் சார்ந்த 37வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தை உயர்கல்வித்துறை செயலாளர் தலைமையிலான குழு நிர்வகித்து வருகிறது.இந்த நிலையில் கடந்த நில ஆண்டுகளாகச் சென்னை பல்கலைக்கழகம் வருமானவரியை முறையாகச் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சுமார் 424 கோடியே 67 லட்சத்து 56 ஆயிரத்து 780 ரூபாய் வருமான நிலுவைத்தொகை செலுத்தப்படாமல் உள்ளது.இதனால் வரியை வசூலிக்கும் வகையில் சென்னை பல்கலைக்கழகத்திற்கு இருக்கும் 37 வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.
இதன்காரணமாக பல்கலைக்கழகம் மற்றும் துறைகள் சார்ந்து வங்கிகளுக்குச் செலுத்தப்படும் காசோலைகள் மீண்டும் வங்கிகள் திருப்பி அனுப்புகின்றனர். இதனால் பணம் எடுக்க முடியாமல் பல்கலைக்கழகத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழகம் தரப்பில் பராமரிக்க வேண்டிய வருமான வரி கணக்குகளைச் சரியாகப் பராமரிக்காமல் போனதும் ஆடிட்டர்கள் மூலம் தணிக்கை செய்து வருமானவரித்துறைக்குக் கணக்குகளைச் சமர்ப்பிக்கத் தவறியதே தற்போது வங்கிக் கணக்குகளை முடக்கியதற்கான காரணமாக முன்வைக்கப்படுகிறது.
இதுகுறித்து உயர்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், வங்கிக் கணக்குகளை மீண்டும் பயன்படுத்த அனுமதி கடிதம் கொடுத்துள்ளோம். கால நீட்டிப்பு கோரி வருமான வரித்துறையிடம் பல்கலைக்கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வருமானவரித்துறைக்கு ஆவணம் தாக்கல் செய்யப்படாததால் வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?