கூவத்தூரில் நடிகைகளுடன்… பகீர் கிளப்பிய ஏ.வி.ராஜு..! முட்டாள்தனமான பேச்சு.. கடுப்பான நடிகை ஷர்மிளா..!

ஏ.வி.ராஜுக்கு பாடகி சின்மயி கண்டனம் தெரிவித்த நிலையில், தற்போது நடிகை ஷர்மிளாவும் கடுமையாக விமர்சித்துள்ளார். 

Feb 20, 2024 - 14:08
கூவத்தூரில் நடிகைகளுடன்… பகீர் கிளப்பிய ஏ.வி.ராஜு..! முட்டாள்தனமான பேச்சு.. கடுப்பான நடிகை ஷர்மிளா..!

கூவத்தூரில் நடிகைகள் வந்ததாக சேலம் ஏ.வி.ராஜுவின் சர்ச்சை பேச்சுக்கு நடிகை ஷர்மிளா கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி.ராஜு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பல பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். அதில் கூவத்தூர் குறித்து பேசியிருப்பது திரையுலகில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.2016 ஆண்டு ஜெயலலிதா மறைவுக்கு பின் ஆட்சியை தக்க வைக்க அதிமுக எம்எல்ஏக்களை ஜெயலலிதா தோழியான சசிகலா கூவத்தூர் ரெசார்ட்டில் தங்க வைத்தார். 

அப்போது, எம்எல்ஏக்களின் ஆதரவை பெற எடப்பாடி பழனிசாமி, பணம், மது, மாது என வாரி இறைத்ததாக ஏ.வி.ராஜு பகீர் கிளப்பியுள்ளார். அவ்வாறு அப்போதைய எம்எல்ஏவும், தற்போதைய சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாச்சலம், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஒருவருடன் நேரம் செலவிட அடம்பிடித்ததாகவும், அதன்பேரில் அரசியலில் பிரமுகரான நடிகர் ஒருவர் நடிகைகளை பேசி அழைத்து வந்ததாக கூறியுள்ளார்.

அந்த நடிகைக்க ஒருநாளைக்கு ரூ.25 லட்சம் கொடுக்கப்பட்டதாகவும். அந்த செலவையெல்லாம் எடப்பாடி பழனிசாமி பார்த்துக் கொண்டதாகவும் குண்டைத் தூக்கி போட்டுள்ளார் ஏ.வி.ராஜு. இவரின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையாகியுள்ளது. ஏ.வி.ராஜுக்கு பாடகி சின்மயி கண்டனம் தெரிவித்த நிலையில், தற்போது நடிகை ஷர்மிளாவும் கடுமையாக விமர்சித்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், என்ன முட்டாள்தனமாக இந்த தோழர் இப்படி பேசுகிறார்? அவர் தனது தனிப்பட்ட பழிவாங்கலுக்காக சினிமாவில் பெண்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார். ஒட்டுமொத்த மீடியாவும் கூவத்தூர் ரிசார்ட்டுக்கு வெளியே முகாமிட்டிருந்தது. இத்தனை ஊடகத்தையும் மீறி ஒரு பிரபல நடிகையை அங்கு அழைத்துச் செல்வது எப்படி சாத்தியம்? என்று சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.
 
ஏவி ராஜூ அளித்த பேட்டி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow