20 ஆண்டுகளில் முதல் முறை.. 120 நாட்களுகளை கடந்து சோத்துப்பாறை அணையில் நீர் திறப்பு
அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் 25 கன அடியாக உள்ளது
சோத்துப்பாறை அணையில் இருந்து 120 நாட்களை கடந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது சோத்துப்பாறை அணை. வரதா நதியின் குறுக்கே கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த அணை மூலம் பெரியகுளம் நகராட்சி மற்றும் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் ஆதாரமாகவும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விலை நிலங்களின் பாசனத்திற்கும் ஆதாரமாக விளங்குகிறது.
இந்த நிலையில் சோத்துப்பாறை அணை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி அதன் முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டியது. இதனால், அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. கடந்த ஜனவரி 10ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழைபெய்ததால், அணைக்கு நீர் வரத்து தொடர்ந்தது. இதன் காரணமாக கடந்த 120 நாட்களாக அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
20 ஆண்டுகளில் முதல்முறையாக தொடர்ச்சியாக 4 மாத காலம் நீர் வெளியேற்றப்பட்டு வரப்படுவது குறிப்பிடத்தக்கது. தற்போது அணையில் நீர் முழு கொள்ளளவான 126.28 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 12 கன அடி ஆகவும், அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் 25 கன அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 98 மில்லியன் கன அடியாக உள்ளது. அணையில் இருந்து தொடர்ச்சியாக நீர் வெளியேற்றப்பட்டு வருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?