உணவுகளில் திரவ நைட்ரஜன் பயன்பாடு? அதிரடி அறிக்கை வெளியிட்டது தமிழ்நாடு அரசு..

உணவுப்பொருட்களுடன் திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்பனை செய்யும் வணிகர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Apr 26, 2024 - 07:48
உணவுகளில் திரவ நைட்ரஜன் பயன்பாடு? அதிரடி அறிக்கை வெளியிட்டது தமிழ்நாடு அரசு..

அண்மையில் ஒரு சிறுவன் திரவ நைட்ரஜன் கலந்த ஸ்மோக் பிஸ்கட்டை உண்டு கடும் வயிற்று வலியில் அலறித் துடித்து மயங்கிய காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலானது. தொடர்ந்து திரவ நைட்ரஜன் பயன்பாடு குறித்து பல்வேறு கருத்துகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உணவுப் பாதுகாப்பு-தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் ஒழுங்குமுறைகள் 2011-ன்படி திரவ நைட்ரஜன் பால்சார்ந்த இனிப்பு வகைகள், ஐஸ்கிரீம் போன்ற உணவுப்பொருட்களில் உறைதல் பணியை மேற்கொள்ள மட்டுமே உதவுவதாக உணவுப்பாதுகாப்புத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். அதன்படி திரவ நைட்ரஜனை packing gas மற்றும் freezant ஆக மட்டுமே பயன்படுத்த முடியும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

உணவுப்பாதுகாப்பு - தர நிர்ணய சட்டம் 2006, பிரிவு 38(10)-ன் படி உணவுப் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த நியமன அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் பிஸ்கட், ஐஸ்கிரீம், வேஃபிள் பிஸ்கட் போன்ற உணவுப்பொருட்களுடன் திரவ நைட்ரஜனை நேரடியாகக் கலந்து விற்பனை செய்யும் வணிகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow