சென்னையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்..? 7 மண்டலங்களுக்கு முக்கிய அறிவிப்பு...

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வளசரவாக்கம், ஆலந்தூர் உள்பட 7 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் 2 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

Apr 26, 2024 - 07:36
சென்னையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்..? 7 மண்டலங்களுக்கு முக்கிய அறிவிப்பு...

இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கிண்டி - பூந்தமல்லி சாலையின் போரூர் சந்திப்பில் பிரதான குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று (ஏப்ரல் 25) இரவு 9 மணி முதல் 27ஆம் தேதி இரவு 9 மணி வரை 2 நாட்களுக்கு அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர் மற்றும் அடையாறு ஆகிய 7 மண்டலங்களுக்கு உட்பட்ட சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்  என கூறப்பட்டுள்ளது.


அதன்படி, அம்பத்தூர் மண்டலத்தில் அத்திப்பட்டு, பாடி, பார்க் ரோடு, டி.எஸ்.கிருஷ்ணா நகர், முகப்பேர் மேற்கு, முகப்பேர் கிழக்கு பகுதிகள், அண்ணா நகர் மண்டலத்தில் அரும்பாக்கம், அமைந்தகரை, சூளைமேடு பகுதிகள், தேனாம்பேட்டை மண்டலத்தில் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ஐஸ் ஹவுஸ், மயிலாப்பூர் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது. 


மேலும், கோடம்பாக்கம் மண்டலத்தில் கோயம்பேடு, விருகம்பாக்கம், சாலிகிராமம், வடபழனி பகுதிகள், வளசரவாக்கம், ஆலந்தூர் மண்டலத்தில் அனைத்து பகுதிகள், அடையார் மண்டலத்தில் ராஜா அண்ணாமலைபுரம், அடையாறு, வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறும், அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. 

குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் தெருக்களுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு 044-4567 4567 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow