திமுக கூட்டங்களில் காலியாகும் சேர்கள், காசு கொடுத்தும் கூடாத கூட்டம்.. கலக்கத்தில் நிர்வாகிகள்..!
கள்ளக்குறிச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்ற கூட்டத்தில், பேச்சை சற்றும் காதில் வாங்காமல் மக்கள் வெளியேறினர்.
கடந்த சில நாட்களாக திமுக அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டங்கள் முடிவதற்கு முன்பே தொண்டர்கள் கூட்டம் காலியாவது தொடர்கதையாகி வருவது தேர்தல் நெருங்கும் நேரத்தில் நிர்வாகிகளை கலக்கமடையச் செய்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. இதற்காக
"உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்- பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும்" என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தொகுதி வாரியாக திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் கூட்டங்களில் பொறுப்பு அமைச்சர்கள், முன்னணி நிர்வாகிகள், எம்பி, எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் காலி இருக்கைகளை பார்த்து அரை மணி நேரம் உரையாற்றியது பேசுபொருளானது.
இந்நிலையில், தேனியில் சாரை சாரையாக வெளியேறிய மக்களை கண்டுகொள்ளாமல் முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் உணர்ச்சிபொங்க பேசியதும், அரங்கேறியுள்ளது.இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்ற கூட்டத்தில், பேச்சை சற்றும் காதில் வாங்காமல் மக்கள் வெளியேறினர்.
இதேபோல் தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசிக்கொண்டிருக்கும் போது ஒவ்வொருவராக கலைந்து செல்லத் தொடங்கினர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் பேசிய நிலையில், அவர் தனது உரையை முடிப்பதற்குள் தொண்டர்கள் பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டனர்.இதனால் அவரும் காலி இருக்கைகளுக்கு மன் உணர்ச்சிபொங்க உரையாற்றும் நிலை ஏற்பட்டது.
What's Your Reaction?