இத்தனை கோடியா? பாஜகவுக்கு எவ்வளவு தேர்தல் நிதி? திமுக எம்பி ஆ.ராசா சொன்ன தகவல்..!

செந்தில் பாலாஜி சிறையில் இருந்து விரைவில் வெளியேறுவார்

Feb 19, 2024 - 12:56
Feb 19, 2024 - 13:20
இத்தனை கோடியா? பாஜகவுக்கு எவ்வளவு தேர்தல் நிதி? திமுக எம்பி ஆ.ராசா சொன்ன தகவல்..!

கரூரில் நடந்த திமுக பரப்புரை கூட்டத்தில் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, பாஜகவுக்கு  இவ்வளவு தேர்தல் நிதியை யார் கொடுக்கிறார்கள் என்று விசாரிக்க தொடங்கினால், பிரதமர் மோடி சிறைக்குச் செல்வது உறுதி என்று கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கரூர் தொகுதியில் உரிமையை மீட்க ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சி நடைபெற்றது.திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக எம்.பி ஆ.ராசா சிறப்புரையாற்றினார்.அப்போது பேசிய அவர், இந்தியாவில் சர்வாதிகார ஆட்சியை நிறுவ பாஜக முயல்வதாகவும்,பாஜகவின் பாசிச ஆட்சியை எதிர்த்துப் போராட வேண்டும் என்று தெரிவித்தார்.திமுக சிறை சித்தரவாதையைக் கண்டு பயப்படாது என்று பேசிய ஆ.ராசா, செந்தில் பாலாஜி சிறையில் இருந்து விரைவில் வெளியேறுவார் என்றும், பாஜகவின் முகத்திரை கிழிக்கப்படும் என்றும் கூறினார்.

அதானியை மிகப்பெரிய மோசடி பேர்வழி என்று வர்ணித்த ஆ.ராசா, அப்படிப் பட்டவரை பிரதமர் மோடி அரவணைக்கலாமா என்று கேள்வி எழுப்பினார். மேலும், பாஜகவுக்கு தேர்தல் செலவுகளுக்காக 6,500 கோடி ரூபாய் வருவதாக குறிப்பிட்ட ஆ.ராசா, இவ்வளவு பணம் எங்கிருந்து வருகிறது? யார் கொடுக்கிறார்கள் என்று விசாரிக்க தொடங்கினால், பிரதமர் மோடி சிறைக்குச் செல்வது உறுதி என்று கூறினார்.

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வி எழுப்பிய ஆ.ராசா, வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக எத்தனை சீட்டுகள் ஜெயித்தாலும், மோடியை பிரதமர் வேட்பாளராக ஆக்க வாக்களிக்க மாட்டோம் என நெஞ்சில் துணிவிருந்தால் கூற முடியுமா என்று கேட்டார். அப்படி கூறினால் அ.தி.மு.க.காரன் அனைவரும் சிறையில் இருப்பார்கள் என்றும் விமர்சித்தார்.

மணிப்பூர் வன்முறையில் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷமே எழுந்தது என்று குறிப்பிட்ட ஆ.ராசா, அப்படிப்பட்ட காட்டுமிராண்டித் தனமான ஆட்சி மீண்டும் வரக்கூடாது என்றும் குறிப்பிட்டு உரையாற்றினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow