உதகையில் காதலர் தினம்; உச்சம் தொட்ட ரோஜாக்களின் விலை

காதலர் தினத்தையொட்டி, கொய் மலர்களுக்கு கடும் தேவை ஏற்பட்டுள்ளதால் அதன் விலை உச்சத்தை எட்டியது.

Feb 14, 2024 - 08:39
Feb 14, 2024 - 09:06
உதகையில் காதலர் தினம்; உச்சம் தொட்ட ரோஜாக்களின் விலை

உதகையில் காதலர் தினத்தை முன்னிட்டு விற்பனைக்கு வந்துள்ள சிவப்பு ரோஜாக்கள் மற்றும் கொய்மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

இன்று காதலர் தினத்தையொட்டி நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க, தமிழகம் மட்டுமல்லாமல் கேரளம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து காதலர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் குவிந்துள்ளனர்.

பொதுவாக காதலர் தினத்தன்று சுற்றுலா தளங்களுக்கு வருகை புரியும் காதலர்கள், ரோஜா மற்றும் கொய்மலர்களை தங்கள் அன்பிற்கினியவர்களுக்கு கொடுத்து காதலை வெளிப்படுத்தி மகிழ்வது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் காதலர் தினத்தையொட்டி ஓசூர், பெங்களூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து சிவப்பு, வெள்ளை, ஆரஞ்சு, மஞ்சள் என பல்வேறு வண்ணங்களில் உள்ள ரோஜா மலர்களும் கொடைக்கானல் உள்ளிட்ட பகுதியிலிருந்து கொய்மலர்களும் விற்பனைக்கு வந்துள்ளன. 

கடந்தாண்டு ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்ட ரோஜா மலர்கள், இந்தாண்டு வரத்து குறைவு காரணமாக ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் 20 மலர்கள் கொண்ட பூங்கொத்து ரூ.600 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் இந்தாண்டு விற்பனைக்கு வந்துள்ள சிவப்பு ரோஜா மலர்கள், காதலர்கள் மற்றும் புதுமண தம்பதியினரை கவர்ந்து வருகிறது. இதனை காதலர்கள் ஆர்வத்துடன் விரும்பி வாங்கி செல்கின்றனர். அதேப்போல் கொய்மலர் விற்பனை அதிகரித்து பூ ஒன்றுக்கு ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow