சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில்
ஜனவரி 13, 14 ஆகிய நாட்களில் காலை 05.00 மணிக்கு புறப்பட்டு மதியம் 01.45 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.
பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை - நாகர்கோவில் - சென்னை இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில் (06081) சென்னை எழும்பூரில் இருந்து ஜனவரி 13, 14 ஆகிய நாட்களில் காலை 05.00 மணிக்கு புறப்பட்டு மதியம் 01.45 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.
மறு மார்க்கத்தில் நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வந்தே பாரத் சிறப்பு ரயில் (06082) நாகர்கோவிலில் இருந்து அதே நாட்களில் மதியம் 02.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
What's Your Reaction?