Veera Dheera Sooran: ‘Ready ஜூட்..’ வீர தீர சூரன் ஷூட்டிங்… பக்கா லோக்கலாக மாறிய விக்ரம்!
தங்கலானை தொடர்ந்து வீர தீர சூரன் ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார் சீயான் விக்ரம்.
சென்னை: பொன்னியின் செல்வனில் ஆதித்ய கரிகாலனாக மிரட்டிய சீயான் விக்ரம், அடுத்து தங்கலான் படத்தில் நடித்துள்ளார். பா ரஞ்சித் இயக்கத்தில் பீரியட் ஜானரில் உருவாகியுள்ள தங்கலான் இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொன்னியின் செல்வனில் மன்னர் வகையறா கெட்டப்பிலும், தங்கலானில் பழங்குடி கெட்டப்பிலும் நடித்துள்ள விக்ரம், வீர தீர சூரனில் பக்கா லோக்கலாக மாஸ் காட்ட காத்திருக்கிறார். சு அருண்குமார் இயக்கும் இப்படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
விக்ரம் உடன் எஸ்ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் வீர தீர சூரனில் நடிக்கின்றனர். இதனால் இப்படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்ட நிலையில், டைட்டில் டீசரில் விக்ரமின் லுக், கெட்டப், டயலாக் டெலிவரி, மேக்கிங் என அனைத்தும் செம்ம ஹைப் கொடுத்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் முதல் பாகம் பற்றிய எந்தவிதமான அப்டேட்டும் கொடுக்காமல், தற்போது உருவாகி வருவது வீர தீர சூரன் பார்ட் 2 என அறிவித்ததும் வித்தியாசமாக உள்ளது.
இந்நிலையில், வீர தீர சூரன் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியது. இதில் பங்கேற்ற வீடியோவை ‘ரெடி ஜூட்’ என்ற கேப்ஷனோடு விக்ரம் தனது டிவிட்டரில் ஷேர் செய்து ரசிகர்களுக்கு வைப் கொடுத்துள்ளார். செம்ம ஸ்டைலிஷாக கேரவன் உள்ளே போன விக்ரம், வெளியே வரும் போது வில்லேஜ் கெட்டப்பில் பக்கா Rugged Boy போல கெத்து காட்டுகிறார். அதேபோல படப்பிடிப்பிலும் விக்ரமின் நடிப்பு வேற லெவலில் மிரட்டுவதாக வீடியோவை பார்த்த ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
மதுரையில் தொடங்கிய வீர தீர சூரன் படப்பிடிப்பு அடுத்தடுத்து வேகமாக நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்தாண்டு இறுதிக்குள் வீர தீர சூரன் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும், அடுத்தாண்டு சம்மரில் படம் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?