Indian 2 Review: வெத்து பிரம்மாண்டம், கதையே இல்ல, தாத்தா ஏமாத்திட்டார்..? இந்தியன் 2 விமர்சனம்!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. அதிக எதிர்பார்ப்பில் ரிலீஸான இந்தப் படத்தின் டிவிட்டர் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

Jul 12, 2024 - 10:38
Indian 2 Review: வெத்து பிரம்மாண்டம், கதையே இல்ல, தாத்தா ஏமாத்திட்டார்..? இந்தியன் 2 விமர்சனம்!
Indian 2 Review

சென்னை: கமல், ஷங்கர் கூட்டணியில் 1996ம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இந்தியன் 2 இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது. லைகா, ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரித்துள்ள இந்தியன் 2, பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்தியன் 2வை தொடர்ந்து 3ம் பாகமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. கமலுடன் சித்தார்த், எஸ்ஜே சூர்யா, காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர், அனிருத் இசையமைத்துள்ளார். 

இந்தியன் 2 ட்ரெய்லர் வெளியான போதே படத்தை நெட்டிசன்கள் பங்கமாக ட்ரோல் செய்திருந்தனர். லஞ்சம், ஊழல் என ஷங்கர் தனது வழக்கமான பாணியில் தான் இந்தியன் 2 படத்தை இயக்கியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் அனிருத்தின் இசையும் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று வெளியான இந்தியன் 2 படம் எப்படி இருக்கிறது என டிவிட்டர்வாசிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் காலை 9 மணிக்கு தான் முதல் ஷோ. ஆனால், தமிழகம் தவிர ஐதராபாத், பெங்களூரு, கொச்சி, மும்பை போன்ற நகரங்களிலும், அமெரிக்கா உள்ளிட்ட சில வெளிநாடுகளிலும் இந்திய நேரப்படி அதிகாலையிலேயே இந்தியன் 2 முதல் காட்சி திரையிடப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு உட்பட மற்ற மொழிகளிலும் இந்தியன் 2 வெளியாகியுள்ளதால், ரசிகர்களின் விமர்சனங்கள் டிவிட்டரை ஆக்கிரமித்துள்ளன. அதன்படி இந்தியன் 2 திரைப்படத்துக்கு CK Review நிறுவனம் 2 ஸ்டார்கள் மட்டுமே வழங்கியுள்ளது. மேலும் தற்போதைய டைம் பீரியடுக்கு ஏற்ற படமாக இல்லாமல் Outdated உள்ளதாகவும் விமர்சித்துள்ளது. அதேபோல், பிரம்மாண்டத்தை நம்பி மட்டுமே இந்தியன் 2 படத்தை இயக்கியுள்ளார் ஷங்கர். மோசமான மேக்கிங், கதை, திரைக்கதையில் சொதப்பல், சில காட்சிகளில் மட்டுமே கமல் ஸ்கோர் செய்துள்ளார் என விமர்சனம் செய்துள்ளது. மேலும், சித்தார்த், அனிருத் பிஜிஎம் எல்லாம் ஓக்கே ரகம் தான் எனவும், எஸ்.ஜே.சூர்யாவுக்கு இந்தியன் 2வில் ஸ்கோப் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக ஷங்கரும் அவரது குழுவினரும் ஏமாற்றியுள்ளதாக விமர்சிக்கப்பட்டுள்ளது. 

சோஷியல் மீடியா சினிமா டிராக்கர் கிறிஸ்டோபர் கனகராஜ், இந்தியன் 2 படத்துக்கு நெகட்டிவாக விமர்சனம் செய்துள்ளார். அதில், விஷுவல்ஸ் பிரம்மாண்டமாக உள்ளதாகவும், கமலின் மேக்கப் வேஸ்ட் என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல், காட்சிகள் Outdated-ஆக வந்துள்ளன எனக் கூறியுள்ள அவர், கிளைமேக்ஸ் சண்டைக் காட்சி மட்டுமே ஆறுதலாக அமைந்துள்ளது. கமல் நடிப்பு நன்றாக இருந்தாலும் கதை, திரைக்கதையில் கொஞ்சம் கூட கிரியேட்டிவிட்டி இல்லை என விமர்சித்துள்ளார். சித்தார்த், எஸ்ஜே சூர்யா, அனிருத் இசை ஆகியவையும் சுமார் ரகம் தான் எனவும், ஷங்கர் ரசிகர்களை ஏமாற்றிவிட்டதாகவும் விமர்சனம் செய்துள்ளார்.

அதேபோல், வெங்கி ரிவிவ்ஸும் இந்தியன் 2 படத்திற்கு நெகட்டிவாகவே விமர்சனம் கொடுத்துள்ளார். இந்தியன் 2 Outdated படமாக வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், படத்தின் கதை கரு உண்மையானதாக இருந்தாலும், எமோஷனலாக எங்கேயும் கனெக்ட் ஆகவில்லை என்றுள்ளார். ஷங்கர் மீண்டும் தனது பழைய படங்களின் திரைக்கதையோடு தான் இந்தியன் 2-வை இயக்கியுள்ளதாகவும், ஆனாலும் அவரது மேஜிக் இதில் எடுபடவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் படம் ஆரம்பித்து முதல் 20 நிமிடங்கள் வரை நன்றாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், இந்தியன் தாத்தா என்ட்ரியானதோடு படம் சோலி முடிந்தது எனக் கூறியுள்ளார். தயாரிப்பு பிரம்மாண்டமான இருந்தாலும், படம் சொல்லும்படி வரவில்லை, அனிருத்தின் இசையும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை எனக் கூறியுள்ளார். முக்கியமாக முதல் பாதியை கூட பொறுத்துக்கொள்ளலாம், ஆனால், இரண்டாம் பாதியை சுத்தமாக பார்க்கவே முடியவில்லை எனவும் விமர்சித்துள்ளார். இறுதியாக இந்தப் படத்துக்கு 1.75 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளார் வெங்கி ரிவிவ்ஸ்.

மூவி க்ரோ செய்துள்ள டிவிட்டர் விமர்சனத்தில், இந்தியன் 2 இரண்டு விதமான ட்ராக் ஆக பயணிக்கிறது. இதில் இரண்டாவது ட்ராக் நன்றாக வந்துள்ளதாகவும், இந்தியன் 3ம் பாகத்துக்கான லீடும் சிறப்பாக கிரியேட் ஆகியுள்ளதாகவும் விமர்சித்துள்ளது. அதேபோல் நெட்டிசன் ஒருவர், இந்தியன் 2 படத்தை கண்டிப்பாக பார்க்கலாம் என்றுள்ளார். இந்தியன் 2ம் பாகத்தில் ஷங்கர் கம்பேக் கொடுத்துள்ளதாக விமர்சனம் செய்துள்ள அவர், படத்தில் சில லேக் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் 10க்கு 8 என ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளார். 

இந்தியன் 2 பாரதியுடு 2 (Bharateeyudu 2) என்ற டைட்டிலில் தெலுங்கில் வெளியாகியுள்ளது. இந்தியன் 2 தெலுங்கு வெர்ஷனுக்கும் நெட்டிசன் ஒருவர் விமர்சனம் செய்துள்ளார். அதில், இந்தியன் 2 ரொம்பவே ஆவரேஜ் மூவி கதையே இல்லாமல் எடுத்துள்ளனர். இந்தியன் 3ம் பாகம் தான் பார்க்கும்படி இருக்கும் என நினைப்பதாகவும், கதை, திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம் என்றும் விமர்சித்துள்ளார். மேலும், இந்தியன் 2 இரண்டாம் பாதி மோசம் எனவும், கிளைமேக்ஸ் சண்டைக் காட்சி மட்டும் நன்றாக இருப்பதாகவும் கூறியுள்ளார். தெலுங்கு ரசிகர்களுக்கு இந்தியன் 2 ஒர்க் அவுட் ஆகாது எனத் தெரிவித்துள்ள அவர், ஷங்கர் ட்ரேட் மார்க் மேக்கிங் இதில் மிஸ்ஸிங் எனக் கூறியுள்ளார். முக்கியமாக அனிருத்தின் பிஜிஎம் படுமோசம் என்றும், இந்தியன் 2 தான் அவரது கேரியரில் மிக மோசமான படமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக ஷங்கர் நல்ல வாய்ப்பை தவறவிட்டார், சீக்கிரமே இந்தியன் 3ம் பாகத்தை ரிலீஸ் செய்தால் நல்லது எனவும் அவர் அட்வைஸ் செய்துள்ளார்.

பெரும்பாலும் இந்தியன் 2 படத்துக்கு நெகட்டிவான விமர்சனங்களே கிடைத்துள்ளதால், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது. தமிழ்நாட்டில் 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுத்தும் திரையரங்குகள் வெறிச்சோடி காணப்படுவது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow