Veera Dheera Sooran: சிக்கலில் வீர தீர சூரன்… விஜய்யை தொடர்ந்து சீயான் விக்ரம் மீது புகார்!
வீர தீர சூரன் படத்தின் போஸ்டர் சர்ச்சையில் விக்ரம் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சீயான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது. பா ரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படம் பீரியட் ஜானரில் உருவாகியுள்ளது. விக்ரம் கேரியரில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தங்கலானுக்குப் போட்டியாக அவரது சீயான் 62 படத்துக்கும் ஹைப் காணப்படுகிறது. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா படங்கள் மூலம் பிரபலமான சு அருண்குமார், சீயான் 62 படத்தை இயக்கியுள்ளார்.
விக்ரமுடன் எஸ்ஜே சூர்யா, துஷாரா விஜயன், சுராஜ் வெஞ்சராமூடு உள்ளிட்ட பலர் நடிக்கும் சீயான் 62 பக்கா கமர்சியல் ஜானரில் உருவாகிறது. இப்படத்தின் ஷூட்டிங் நேற்று முதல் மதுரையில் தொடங்கியது. முன்னதாக சீயான் 62 டைட்டில் டீசர் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. அதன்படி சீயான் 62 டைட்டில் வீர தீர சூரன் என அறிவிக்கப்பட்டதோடு, டீசரும் செம்ம மிரட்டலாக வெளியானது. ஜெமினி, சாமி படங்களுக்குப் பின்னர் விக்ரமின் தர லோக்கலான கமர்சியல் ஜானரில் வீர தீர சூரன் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்நிலையில், வீர தீர சூரன் படப்பிடிப்பு தொடங்கிய அதே நாளில் இப்படத்துக்கு சிக்கல் எழுந்துள்ளது. அதாவது வீர தீர சூரன் போஸ்டர் இளைஞர்கள் மத்தியில் வன்முறையை தூண்டுகிறது என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி சென்னையைச் சேர்ந்த ஆர்டிஐ செல்வம் என்பவர் கொடுத்துள்ள புகாரில், "இணையதளத்தில் இளைஞர்கள் கத்தியை வைத்து கேக் வெட்டினால் அதற்கு காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது. சமூக வலைதளங்களில் கத்தியை வைத்து கொண்டு ரீல்ஸ் போட்டால் காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது.
அதேபோல், கத்தியை வைத்து புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற இணையதளங்களில் பகிர்ந்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது. ஆனால் தற்போது வீரதீர சூரன் படத்தின் போஸ்டரில் கத்தியை இரண்டு கையில் வைத்துக் கொண்டும் பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் தவறான எண்ணத்தை கொண்டு செல்லும் வகையில் விக்ரம் செயல்பட்டு வருகிறார். இந்திய தண்டனைச் சட்டம் 1860 கீழ் 326 படி இது தவறு தகவல் தொழில்நுட்ப தடுப்புச் சட்டம் 2000 கீழ் 66(a), சமூக வலைதளங்களில் அதைகண்டு இளைஞர்கள் மத்தியில் வன்மத்தை தூண்டும் வகையில் உள்ளதால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தவறானது.
எனவே விக்ரம், இயக்குநர், ஒளிப்பதிவாளர் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழும், தகவல் தொழில்நுட்பம் தடுப்பு சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் தான் விஜய்யின் கோட் படத்தில் இருந்து வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலுக்கு எதிராக புகார் கொடுத்திருந்தார் ஆர்டிஐ செல்வம். அந்தப் பாடலில் இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகும் வகையில் வரிகள் இருப்பதாக புகார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?