Vettaiyan: ரஜினிக்கே சம்பள பாக்கி... வேட்டையன் ரிலீஸுக்கு ஆப்பு... இதென்னய்யா புதுசா..?

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள வேட்டையன் படத்தின் ரிலீஸில் சிக்கல்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Jun 26, 2024 - 17:48
Vettaiyan: ரஜினிக்கே சம்பள பாக்கி... வேட்டையன் ரிலீஸுக்கு ஆப்பு... இதென்னய்யா புதுசா..?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அடுத்தப் படமான கூலியில் நடிக்க ரெடியாகிவிட்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங், ஜூலை முதல் வாரம் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக தசெ ஞானவேல் இயக்கிய வேட்டையன் படத்தில் நடித்து வந்த ரஜினி, சில வாரங்களுக்கு முன்னர் தான் தனது போர்ஷன் முழுவதையும் முடித்துக் கொடுத்தார். அதோடு வேட்டையன் படப்பிடிப்பு முழுவதும் முடிவுக்கு வந்ததாக படக்குழுவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இப்படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  

வேட்டையன் திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது. ஆனால், ரிலீஸ் தேதி மட்டும் இன்னும் அபிஸியலாக அறிவிக்கவில்லை. அதேநேரம் ஆயுதபூஜை விடுமுறை ஸ்பெஷலாக அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வேட்டையன் அக்டோபர் மாதம் ரிலீஸாவதே சந்தேகம் தான் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக வேட்டையன் ரிலீஸுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியே தடை போட ரெடியாகிவிட்டதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர வைத்துள்ளது. 

அதாவது, சூப்பர் ஸ்டார் ரஜினி, வேட்டையன் படத்தில் சொன்னபடி முழுமையாக முடித்துவிட்டார். கடைசி ஷெட்யூலில் ஒரு மாதத்துக்கும் மேலாக கால்ஷீட் கொடுத்து நடித்துள்ளதாகத் தெரிகிறது. இந்த ஒரு ஷெட்யூலுக்கான சம்பளம் மட்டும் இன்னும் ரஜினி கைகளுக்கு செல்லவில்லை என சொல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே லைகா நிறுவனம் பட்ஜெட் பிரச்சினையில் சிக்கி சின்னாப் பின்னமாகியுள்ளதாக தெரிகிறது. ஒரேநேரத்தில் அஜித்தின் விடாமுயற்சி, கமல் நடிப்பில் இந்தியன் 2, ரஜினியின் லால் சலாம், வேட்டையன் என மேலும் சில பிரம்மாண்டமான படங்களை தயாரித்து வருகிறது.  

அதற்கு முன்னர் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திலும் எதிர்பார்த்த வசூல் கிடைக்காமல் மரண அடி வாங்கியது. இதனால் லைகாவின் கஜானாவே காலியாகிவிட்டது என்றும், இதோடு சினிமா தயாரிப்பில் இருந்தே விலகிவிட சுபாஸ்கரன் முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. விடாமுயற்சி படம் சொன்னபடி முடியாததால் அஜித்தும் கடைசியாக ஒரு சான்ஸ் கொடுக்க, தற்போது அஜர்பைஜானில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். இன்னொரு பக்கம் இந்தியன் 2 வசூலில் முதல் ஷேர் ரெட் ஜெயன்ட் நிறுவனத்துக்கு தான் போகும் என்பதால், லைகாவின் நிலை பரிதாபமாக உள்ளதாம். 

இதுபோன்ற காரணங்களால் தான் ரஜினிக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் லைகா புரொடக்‌ஷன் திணறி வருகிறதாம். ஆனால், இந்த கதையெல்லாம் இங்கே எடுபடாது, தனக்கு சேர வேண்டிய சம்பளத்தை செட்டில் செய்தால் தான் டப்பிங் கொடுப்பேன் என ரஜினி முடிவோடு இருக்கிறாராம். சம்பளம் விஷயம் பேச லைகா சுபாஷ்கரனுக்கு ரஜினி கால் பண்ண, அவரோ எடுக்கவே இல்லையாம். இந்த டென்ஷனில் தான் டப்பிங் கொடுக்க வரமுடியாது என ரஜினி ஒரேபோடாக போட்டுவிட்டதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. வேட்டையன் படத்தின் ஓடிடி, சாட்டிலைட் ரைட்ஸ் ஆகியவை விற்பனையாகியும், ரஜினிக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலைக்கு லைகா சென்றுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow