விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா பிப்.26-ல் திருமணம்: மார்ச் 4-ல் வெட்டிங் ரிசப்ஷன், செல்போனுக்கு தடை 

நட்சத்திர நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமணம் பிப்.26-ம் தேதி நடைபெற உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். மார்ச் 4-ம் தேதி வெட்டிங் ரிசப்ஷனும் கோலகலமாக நடைபெற உள்ளது. 

Feb 23, 2026 - 09:34
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா பிப்.26-ல் திருமணம்: மார்ச் 4-ல் வெட்டிங் ரிசப்ஷன், செல்போனுக்கு தடை 
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா பிப்.26-ல் திருமணம்: மார்ச் 4-ல் வெட்டிங் ரிசப்ஷன்

தங்கள் திருமணத்துக்கு The Wedding of ViRosh என்று பெயரிட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ViRosh என்பது விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா ஆகிய பெயர்களின் சுருக்கமாக ரசிகர்கள் தங்களுக்கு சூட்டியதால் அதை பயன்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "நாங்கள் எதையும் திட்டமிடுவதற்கு முன்பே, எங்களுக்காக எதையும் தேர்ந்தெடுப்பதற்கு முன்பே.. நீங்கள் ஏற்கனவே ஒரு முடிவுக்கு வந்துவிட்டீர்கள். மிகுந்த அன்புடன் எங்களுக்கு ஒரு பெயரைச் சூட்டினீர்கள்.

எங்களை 'வி்ரோஷ்' என்று அழைத்தீர்கள். எனவே இன்று முழு மனதுடன், எங்கள் திருமணத்திற்கு உங்கள் நினைவாக 'தி வெடிங் ஆஃப் வி்ரோஷ்' என்று பெயரிடுகிறோம். எங்களை இவ்வளவு நேசித்ததற்கு நன்றி. நீங்கள் எப்போதும் எங்கள் வாழ்வின் ஒரு அங்கமே!" என்று பதிவிட்டுள்ளனர்.

விஜய்யின் வீடு முழுவதுமாகப் பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் இப்போதே தொடங்கிவிட்டதை இது உறுதிப்படுத்துகிறது.

தென்னிந்திய திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இடையேயான நீண்ட நாள் காதல் குறித்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்த ஜோடி தங்களது வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்குச் செல்லத் தயாராகிவிட்டது. வரும் பிப்ரவரி 26-ஆம் தேதி, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆடம்பரத்தை விட தனிப்பட்ட ரகசியத்தன்மைக்கு (Privacy) முக்கியத்துவம் கொடுப்பவர்கள் இந்த ஜோடி. இதன்காரணமாக, திருமணத்திற்கு வரும் விருந்தினர்களுக்குக் கடுமையான 'நோ-போன் பாலிசி' (No-Phone Policy) விதிக்கப்பட்டுள்ளது. திருமண மேடையில் விருந்தினர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதியில்லை. தங்களது வாழ்வின் மிக முக்கியமான தருணங்கள் சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் கமெண்ட்டுகளுக்காகச் சிதறடிக்கப்படுவதை இவர்கள் விரும்பவில்லை.

திருமணப் புகைப்படங்கள் கசியாமல் இருக்க, அதிகாரப்பூர்வ புகைப்படக் கலைஞர்களிடமும் ரகசியக் காப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மார்ச் 4 அன்று ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்றும் கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow