சேலத்தில் டிசம்பர் 30-ம் தேதி விஜயின் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொள்கிறார் ?
சேலத்தில் டிசம்பர் 30-ம் தேதி சேலத்தில் தனது மக்கள் சந்திப்பு பயணத்தை தவெக தலைவர் விஜய் மேற்கொள்ள உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கிய விஜய், விக்கிரவாண்டி, மதுரை என இரு மாவட்டங்களில் மாநாடு நடத்தி முடித்தார். இதன் பிறகு மக்கள் சந்திப்பு பயணத்தை விஜய் மேற்கொண்டார்.
இதில் கரூர் மக்கள் சந்திப்பு பயணத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து மக்கள் சந்திப்பு பயணத்தை விஜய் தள்ளி வைத்து இருந்தார். இதற்கு இடையே காஞ்சிபுர மக்கள் கூட்ட அரங்கிற்குள் சந்தித்து விஜய் பேசியிருந்தார்.
இதை தொடர்ந்து புதுச்சேரியில் பொதுக்கூட்டம் மூலம் அம்மாநில மக்களை கடந்த வாரம் விஜய் சந்தித்தார். இந்நிலையில், நாளை ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை சமீபத்தில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன் மேற்கொண்டு இருக்கிறார்.
இதன் பின்னர் மீண்டும் தமிழகத்தில் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடர் தவெக தரப்பில் சேலம் மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் அனுமதி கடிதம் அளிக்கப்பட்டிருந்தது. டிசம்பர் 30-ம் தேதி சேலத்தில் 3 இடங்களில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?

