Vishal: “இதெல்லாம் பேசுனா பைத்தியம்ன்னு சொல்றாங்க..” லயன்ஸ் கிளப் விழாவில் உருகிய விஷால்
சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்ற லயன்ஸ் கிளப்பின் 26-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்ட விஷாலின் பேச்சு வைரலாகி வருகிறது.
கோலிவுட்டின் புரட்சித் தளபதி என்ற அடைமொழியோடு வலம் வருகிறார் விஷால். ஆரம்ப காலத்தில் செல்லமே, சண்டைக்கோழி என வைப் கொடுத்த விஷால், அதன் பின்னர் சிங்கிள் சூப்பர் ஹிட் கொடுக்கவே தடுமாறினார். இறுதியாக கடந்தாண்டு வெளியான மார்க் ஆண்டனி மூலம் கம்பேக்கான விஷால், விரைவில் அரசியலுக்கும் வரப் போவதாக தளபதி விஜய்க்கு டஃப் கொடுத்துள்ளார். சில்வர் ஸ்க்ரீனில் சிக்ஸர் அடிக்க முடியவில்லை என்றாலும், சோஷியல் மீடியாவில் தற்போதைக்கு விஷால் தான் வைரல் கிங்.
இந்த நிலையில், DG வைஷ்ணவ் கல்லூரி வளாகத்தில், அண்ணா நகர் லயன்ஸ் கிளப் நடத்திய 26வது ஆண்டு விழாவில் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அதில், எப்போதும் போல கர்ஜனை செய்யாமல் கொஞ்சம் அடக்கியே வாசித்த விஷால், மேடையில் நிற்பதால் நான் சீப் கெஸ்ட் இல்லை, மக்களுக்கு சேவை செய்யும் நீங்கள் தான் உண்மையான விருந்தினர்கள் என சர்ப்ரைஸ்ஸாக ஒரு தக் லைஃப் கொடுத்தார்.
அதேபோல், சுவாமி விவேகானந்தா பரிசோதனை மையம், ஏழை எளிய மக்களுக்காக மிக குறைந்த செலவில் Blood Test எடுத்து வருவதாகவும், இதையெல்லாம் வெளிய போய் பேசுனா, என்னை பைத்தியக்காரன்னு சொல்றாங்க என்றும் விஷால் சைலண்ட் மோடில் ஆதங்கப்பட்டுள்ளார். ஆனாலும் நான் லயன்ஸ் கிளப்பின் சேவைகளை வெளியில் பேசுவேன்… இன்னும் நீங்க நிறைய உதவிகள் செய்யணும்ன்னு என்னோட கேரவன் வாசல்ல வந்தும் நிற்குறாங்க என விஷால் பேசியது வைரலாகி வருகிறது.
What's Your Reaction?