ஜி.யூ.போப், கால்டுவெல் பற்றி பேச ஆளுநருக்கு தகுதி இல்லை! கடுப்பான செல்வப்பெருந்தகை.

"இந்தியாவை சேராத ஜி.யூ.போப், கால்டுவெல் ஆகியோர் தமிழையும், இந்தியாவையும் நேசித்தார்கள்"

ஜி.யூ.போப், கால்டுவெல் பற்றி பேச ஆளுநருக்கு தகுதி இல்லை! கடுப்பான செல்வப்பெருந்தகை.

கால்டுவெல் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதற்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

மறைந்த முன்னாள் எம்.பி வசந்தகுமார் நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.பி விஜய்வசந்த் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, திமுக-காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது எனக் கூறினார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடுவதாக நினைத்தே வேலை செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய புத்தகம் போலியானது என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதற்கு கண்டனம் தெரிவித்த செல்வப்பெருந்தகை, ஜி.யூ.போப், கால்டுவெல் பற்றிப் பேச ஆளுநருக்கு தகுதி இல்லை எனக் கூறினார். மேலும், அவர்கள் இருவரும் இந்தியாவை சேராதவர்கள் என்றாலும் தமிழையும் இந்தியாவையும் நேசித்தார்கள் எனவும் ஆனால் ஆளுநரால் தமிழ்நாட்டை நேசிக்க முடியவில்லை எனவும் விமர்சித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow