கிரிக்கெட் மட்டுமல்ல... நீட்டா அம்பானி சொல்லும் வுமன் பிரீமியர் லீக் ரகசியம்!

பெண்களால் அனைத்து விதமான விளையாட்டுப் போட்டிகளிலும் சாதிக்க முடியும் என்பதை வுமன்ஸ் பிரீமியர் லீக் எடுத்துக்காட்டியுள்ளதாக நீட்டா அம்பானி தெரிவித்துள்ளார்.

Mar 13, 2024 - 18:29

மும்பை இந்தியன்ஸ் அணியின் கடைசி லீக் போட்டி செவ்வாய்க்கிழமை(மார்ச்-12) டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கட்டாய வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துள்ளது. இந்த போட்டியைக் காண மும்பை அணியின் உரிமையாளர் நீட்டா அம்பானி வருகை தந்திருந்தார். போட்டிக்குப் பிறகு பேசிய அவர், "நமது பெண்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தக் கிடைத்த மிகச்சிறந்த தளம். உலகின் சிறந்த வீரர்களுடன் விளையாடுவது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. வுமன் பிரீமியர் லீக் போட்டிகள் கிரிக்கெட் மட்டுமல்லாது, அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் பெண்களால் அனைத்து விதமான போட்டிகளிலும் சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது" எனத் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow