CSK தோல்வி.. மகிழ்ச்சியில் துள்ளிய காவ்யா மாறனை விமர்சித்த முன்னாள் அமைச்சர்

CSK அணி நேற்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வியுற்ற நிலையில், SRH அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

Apr 26, 2025 - 11:56
Apr 26, 2025 - 12:05
CSK தோல்வி.. மகிழ்ச்சியில் துள்ளிய காவ்யா மாறனை விமர்சித்த முன்னாள் அமைச்சர்
former minister jayakumar criticizes kavya maran expressions

ஐ.பி.எல் 2025 டி20 கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை அணிக்காக முதல் முறையாக களமிறங்கிய ப்ரெவிஸ் 42 ரன்களும், ஆயுஸ் 30 ரன்களும் குவித்தனர். மற்ற வீரர்கள் யாரும் சொல்லிக் கொள்ளும் படி பெரிய அளவில் ரன்கள் குவிக்காத நிலையில் 154 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது சென்னை அணி.

இதன்பின் களமிறங்கிய ஹைதராபாத் அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி சென்னை அணிக்கு அதிர்ச்சியளித்தது. இந்த போட்டியில் வெற்றிபெற்ற சன்ரைசர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்திற்கு முன்னேறிய நிலையில், சென்னை சூப்பர்கிங்ஸ் அணி கடைசி இடத்திற்கு பட்டா வாங்கியது போல் தொடர்ந்து நகராமல் உள்ளது. இப்போட்டியின் மூலம் சென்னை அணி தொடர்ந்து 4-வது முறையாக சேப்பாக்கம் மைதானத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.

காவ்யா மாறனும்-கேமராவும்:

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் CEO-வாக காவ்யா மாறன் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறார். இவர் திமுக கட்சி தொடர்பான குடும்ப பின்னணியை கொண்டவர் என்பதே அனைவரும் அறிவார்கள். ஹைதராபாத் அணி விளையாடும் அனைத்து போட்டிகளிலும் கேமரா நிச்சயம் காவ்யா மாறன் பக்கம் திரும்பும். தன் சொந்த அணியின் வீரர்கள் சொதப்பும் போது, விக்கெட் வீழ்த்தும் போது, பவுண்டரிகளை பறக்கவிடும் போது என அனைத்து சூழ்நிலைகளிலும் காவ்யா மாறன் கொடுக்கும் ரியாக்‌ஷனுக்கு என தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் சென்னை அணியை ஹைதராபாத் வீழ்த்திய போது தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார் காவ்யா மாறன். இதனிடையே, காவ்யா மாறன் புகைப்படத்தை பகிர்ந்து அதிமுகவினை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் x வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பதிவு சர்ச்சையினை கிளப்பியுள்ளது. தன்னுடைய பதிவில், ”பணம்-தொழில் என்று வந்துவிட்டால் தமிழும் கண்ணுக்கு தெரியாது. தமிழ்நாடும் கண்ணுக்கு தெரியாது. பணத்திற்காக‌ எதிராகவும் நிற்பார்கள். எதையும் செய்ய துணிவார்கள். தமிழ்நாட்டை சுரண்டி திண்ற கார்ப்பரேட் குடும்பம் மட்டும் கொண்டாடும்‌ வெற்றி” என குறிப்பிட்டுள்ளார்.

கமெண்டில் பலர் கிரிக்கெட்டினை விளையாட்டாக பார்க்காமல், அதிலும் அரசியலா? என முன்னாள் அமைச்சரின் பதிவினை விமர்சனம் செய்து வருகின்றனர். இன்னும் சிலர் அமைச்சரின் கருத்து தேவையில்லாத ஒன்று என்கிற தொனியில் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow