"வேறு வேலை இருந்தா பாருங்க..!" அம்பயர்-ஐ போட்டு விளாசிய இலங்கை கேப்டன் !!
இலங்கை டி20 கேப்டன் வனிந்து ஹசரங்கா, அம்பயர் லிண்டன் ஹன்னிபாலை கடுமையாக விமர்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை, தம்புல்லாவில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அடுத்ததாக விளையாடிய இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி 3 பந்துகளில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர் வஃபடார் மோமான்ட் ஒரு ஃபுல் டாஸ் பந்தை வீசினார். இதைத் தொடர்ந்து நோ பால் என்று அறிவிக்கப்படும் என்று கமிண்டு மெண்டிஸ் எதிர்பார்த்தார். ஆனால், ஸ்கொயர் லெக்கில் நின்றிருந்த அம்பயர் லிண்டன் ஹன்னிபால் நோ பால் கொடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து கடைசி 3 பந்துகளில் இலங்கையால் 7 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
ஆட்டம் முடிந்த பிறகு பேசிய இலங்கை கேப்டன் வனிந்து ஹசரங்கா, இதுபோன்ற மோசமான அம்பயரிங்கை நான் பார்த்ததில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் இப்படி நடக்கவே கூடாது. அந்த ஃபுல் டாஸ் பந்து இடப்புக்கு மேல் சென்றது. இன்னும் கொஞ்சம் மேலே சென்றிருந்தால் பேட்ஸ்மேன் தலையைத் தாக்கியிருக்கும் என்றார்.
அம்பயர் லிண்டன் ஹன்னிபால் பெயரை வெளிப்படையாக கூறாமல், “ இப்படி அம்பயரிங் செய்வதற்கு வேறு வேலை ஏதாவது பார்க்கலாம்” என்று ஹசரங்கா விமர்சித்தார். இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்தாலும் இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
மேலும் படிக்க :
What's Your Reaction?